கோலாலம்பூர், ஆக 14- மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷாவை மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்- முஸ்தாபா பில்லா ஷா நேற்று லண்டனில் சந்தித்தார்.
அந்த சந்திப்பின் போது மாமன்னர் சுல்தான் ஷராபுடினை நலம் விசாரித்த தோடு அவருடன் உரையாடியதாக இஸ்தானா நெகாரா தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
சுல்தான் ஷராபுடின் விரைவில் பூரண குணமடையவும் அவர் ஆரோக்கியத்துடனும் நீண்ட ஆயுளோடும் வாழவும் பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா பிரார்த்திப்பதாகவும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
புரோஸ்டேட் ஹோல்மியம் லேசர் அணுக்கதிர் அறுவை சிகிச்சைக்காக சுல்தான் ஷராபுடின் கடந்த ஜூல 28ஆம் தேதி முதல் லண்டனில் இருந்து வருகிறார். நாளை 15ஆம் தேதி அவர் தாயகம் திரும்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லாவும் அவரின் துணைவியார் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியாவும் சிறப்பு பயணம் மேற்கொண்டு லண்டன் சென்றுள்ளனர். அவர்கள் நாளை நாடு திரும்பவுள்ளனர்.








