NATIONAL

சிலாங்கூரில் இடியுடன் கூடிய பலத்த மழை

13 ஆகஸ்ட் 2023, 3:56 PM
சிலாங்கூரில் இடியுடன் கூடிய பலத்த மழை

ஷா ஆலம், ஆகஸ்ட் 13: இன்று  சிலாங்கூரில் உள்ள ஆறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவை சபாக் பெர்ணம், கோலா சிலாங்கூர், உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக் மற்றும் பெட்டாலிங் ஆகிய மாவட்டங்கள் ஆகும். மேலும், பினாங்கு மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களிலும் இதே வானிலைதான் இருக்கக்கூடும் என மெட்மலேசியா தனது முகநூலில் தெரிவித்துள்ளது.

கெடா, பேராக், பகாங், நெகிரி செம்பிலான், மலாக்கா மற்றும் சபா ஆகிய மாநிலங்களில் உள்ள பல பகுதிகளிலும் இதே வானிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழைபெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகளதென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம்மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லதுஅதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்புஎன்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.