NATIONAL

கிள்ளான் துறைமுகம் நோக்கி வந்த கப்பலில் இருந்த கொள்கலன்களில் தீ!

13 ஆகஸ்ட் 2023, 5:43 AM
கிள்ளான் துறைமுகம் நோக்கி வந்த கப்பலில் இருந்த கொள்கலன்களில் தீ!

ஷா ஆலம், ஆக 13- இன்று அதிகாலை இங்குள்ள கிள்ளான் துறைமுகத்திற்குச் சென்று

கொண்டிருந்த சரக்குக் கப்பலில் இருந்த பல கொள்கலன்களில் தீப்பற்றியது.

பிந்து கெடாங் தீவில் இருந்து தென்மேற்கே சுமார் ஆறு கடல் மைல் தொலைவில் பயணித்துக் கொண்டிருந்த ஷென்சென் கே.எம்.டி.சி. என்ற அந்தக் கப்பலில் தீப்பற்றியதாகச் சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் வான் முகமது ரசாலி வான் இஸ்மாயில் கூறினார்.

இச்சம்பவம் சம்பவம் குறித்து அதிகாலை 1.30 மணியளவில் தனது துறைக்கு அழைப்பு

வந்ததாகக் கூறிய அவர், கடற்படை மற்றும் மலேசியக் கடல்சார் அமலாக்க

நிறுவனம் உள்ளிட்ட தரப்பினர் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்ததாகச் சொன்னார்.

தீயை அணைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இன்று

அதிகாலை 5.14 மணி வரை உயிரிழப்பு தொடர்பான எந்தப் புகாரும் செய்யப்படவில்லை

என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.