செய்தி மா.சிவகுமார்.
கோலசிலாங்கூர் பெர்மாத்தாங் , ஆகஸ்ட் 11-மக்களுக்கு நற்சேவை தகுந்த நேரத்தில் வழங்க வேண்டும். அவர்களின் நலனில் அக்கரை காட்ட வேண்டும்.கஷ்ட்டப்படும் குடுங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.அதே சமயம் உண்மையாக உழைப்பவர்களுக்கு நாம் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட வேண்டும் என்று கோலசிலாங்கூர் பெர்மாத்தாங் தொகுதியில் களமிறங்கும் பாக்காத்தான் ஹரப்பான் வேட்பாளர் முகமட் யாஹ்யா மாட்ஷாரி அவர்கள் நேற்று தாமான் தென்னை மரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறினார்.
அதோடு அன்று நாம் வெவ்வேறு கட்சியாக இருந்து செயல்பட்டோம்.ஆனால் அதுவே இன்று நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவது உண்மையிலே வரவேற்கத்தக்கதாக அமைந்து விட்டது.அதற்கு நமது பிரதமருக்கு இந்த வேளையில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.எதிர்வரும் 12 -ஆம் திகதி தேர்தல் அது இங்கு வந்திருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.அந்த வகையில் இந்த தொகுதியில் நான் இந்த முறை களம் காண்கிறேன்.
அதுவும் உங்கள் வற்றாத ஆதரவு இருக்கும் என்று நம்புகிறேன்.ஆகவே உங்கள் வாக்குகளை இம்முறை எனக்கு வழங்கி ஆதரவு தரும்படியும் இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மண்ணில் பிறந்த எனக்கு உங்களின் ஆதரவு மிக முக்கியம் . எனவே இங்கு நிறைய வயதானவர்கள் இருப்பதால் அவர்களின் ஆசி எனக்கு கிடைத்து விட்டது. ஆகவே.அதே சமயம் அனைவரின் ஒத்தழைப்பு மிக அவசியம்.
எனவே இம்முறை மக்களின் , அதாவது உங்களின் வாக்குகளை எனக்கு போடும்படி இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். மேலும் இந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுலைமான்,மஇகா தலைவர்கள் மற்றும் பலர் இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஒற்றுமையை நிலைநாட்டிய அனைவருக்கும் இந்த வேளையில் நன்றியியை கூறிக் கொண்டார் பெர்மாத்தாங் சட்டமன்ற வேட்பாளர் முகமட் யாஹ்யா மாட்ஷாரி அவர்கள்.