ECONOMY

கோல குபு பாருவில் வெற்றியை நோக்கி  தீவிர பிரச்சாரம்.

11 ஆகஸ்ட் 2023, 2:31 AM
கோல குபு பாருவில் வெற்றியை நோக்கி  தீவிர பிரச்சாரம்.
கோல குபு பாருவில் வெற்றியை நோக்கி  தீவிர பிரச்சாரம்.
கோல குபு பாருவில் வெற்றியை நோக்கி  தீவிர பிரச்சாரம்.

செய்தி, சு.சுப்பையை

கோலகுபு.பாரு. ஆகஸ்ட்.11- மூன்றாவது தவணையாக கோல குபு பாரு சட்டமன்ற தொகுதியில் லீ கீ ஹியோங் போட்டியிடுகிறார்.  ஜ.செ.க கட்சியின் சார்பில் நம்பிக்கை கூட்டணி வேட்பாளாராக போட்டியிடுகிறார்.

 வெற்றியை நோக்கி தீவிர பிரச்சாரத்தில் ஈடு பட்டுள்ளார். இம்முறை இத்தொகுதியில் 4 முனை போட்டியை எதிர் நோக்குகிறார். இருப்பினும் அவரது வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது என்று பல வாக்காளர்கள் கருத்து தெரிவித்தனர்.

நேற்று புக்கிட் தாகார் தோட்ட மக்களை சந்தித்து வாக்கு வேட்டையில் ஈடு பட்டார்.அந்த சந்திப்பின் போது திரளாக கூடியிருந்த வாக்காளர் மத்தியில் தங்களது வீட்டுடமை பிரச்னை குறித்து கேள்வி எழுப்பினர்.

மேரி தோட்டம், மிஞ்க் தோட்டம், சுங்கை திங்கி தோட்டம், நைகல் கார்டனர் தோட்டம், புக்கிட் தாகார் தோட்டம் ஆகிய 5 தோட்டங்களின் தொழிலாளர்களுக்கு தேவையான சொந்த வீடமைப்பு திட்டம் மிக நீண்ட காலமாக கிடப்பில் கிடக்கிறது. இவ்விவகாரம் குறித்து சட்ட மன்ற உறுப்பினராகவும்       தற்போது வேட்பாளாராகவும் இருக்கும் லீ கீ ஹியோங் விரைந்து தீர்வுக்கான நடவடிக்கையில் ஈடு பட வேண்டும் என்று அவர்கள்  எதிர்பார்க்கின்றனர்.

விரைவில் இந்த ஐந்து தோட்ட வீட்டு பிரச்னை குறித்து நடவடிக்கை குழுவையும் வீட்டுடமை மற்றும் ஊராட்சி மன்ற அமைச்சார் ஙா கொர் மிங் அவர்களுடன் சந்திப்பு கூட்டத்தை ஏற்பாடு செய்கிறேன். இந்த சந்திப்பு கூட்டத்தின் வழி நல்ல தீர்வு பிறக்கும் என்று எதிர் பார்க்கிறேன் என்று லீ கூறினார்.

மிக நீண்ட காலமாக இந்த வீடமைப்பு திட்டம் இழுபறியாக இருந்து வருகிறது. ஆனால் இப்பிரச்னைக்கு தற்போது விடிவு காலம் பிறந்துள்ளது. மத்திய அரசும் மாநில அரசும் ஒரே நிலையில் இருக்குகிறது. இப்படிப்பட்ட சூழலில் இப்பிரச்னைக்கு விடிவு பிறக்கும். 250க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நல்லது நடக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இந்த 5 தோட்ட தொழிலாளர்களின் வீட்டுத்திட்டத்திற்கு முதலில் 13..5 ஏக்கர் நிலம் பெர்ஜயா நிறுவனம் ஒதுக்கியது. பல்வேறு போராட்டத்திற்கு பின்னர் தற்போது 20 ஏக்கர் நிலம் ஒதுக்கியுள்ளது. இந்த நிலத்தில் தோட்ட மக்களுக்கு  தரை  வீடுகள் வேண்டும் என தோட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அமைச்சருடன் சந்திப்பு ஏற்பாடு செய்கிறேன் என்று வேட்பாளர் லீ வாக்குறுதி கொடுத்தவுடன் மகிழ்ச்சியுடன் தோட்ட மக்கள் காணப்பட்டனர்.. இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நல்லதொரு தீர்வுக்கு வழி கொடுத்துள்ளது என்றால் மிகையாகாது.

இந்த பிரச்சாரக்கூட்டத்தில் முதன் முறையாக நம்பிக்கை கூட்டணி வேட்பாளருடன் ம.இ.கா. தலைவர்களும் கலந்து கொண்டனர்.புக்கிட் தாகார் தோட்ட மக்களிடம் வேட்பாளர் லீக்கு   வாக்கு வேடையாடினர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.