NATIONAL

அரையிறுதி போட்டியில் லீ ஜி ஜியா தோல்வி

6 ஆகஸ்ட் 2023, 10:18 AM
அரையிறுதி போட்டியில் லீ ஜி ஜியா தோல்வி

கோலாலம்பூர், ஆகஸ்ட் 6: இந்த சீசனில் நிச்சயமற்ற ஆட்டத்தில் இருந்து மீண்டு வருவதற்கான தேசிய ஒற்றையர் விளையாட்டாளரான லீ ஜி ஜியாவின் முயற்சிகள் ஆஸ்திரேலிய ஓபன் அரையிறுதி போட்டியில் முறியடிக்கப்பட்டது.

குவேசென்டர்,சிட்னி அரங்கில் நடந்த 81 நிமிட ஆட்டத்தில், உலகின் 17-வது தரவரிசையில் உள்ள தேசிய விளையாட்டாளர் 19-21, 21-13, 13-21 என்ற செட் கணக்கில் உலகின் 24-வது இடத்தில் உள்ள சீனாவின் ஹாங் யாங்கிடம் தோற்றார்.

நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய்யை ஹாங் யாங் எதிர்கொள்கிறார்.

மற்றொரு அரையிறுதியில் பிரணாய் 21-18, 21-12 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான பிரியான்ஷு ராஜாவத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஆஸ்திரேலிய ஓபனில், அரையிறுதிச் சுற்றில் ஜியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஒற்றையர் ஆட்டக்காரர் இங் சி ஓங் மற்றும் ஆண்கள் இரட்டையர் ஜோடியான ஆரோன் சியா மற்றும் சோ வோய் இக் நேற்று காலிறுதி போட்டியில் தோல்வியுற்றதால் மலேசியாவின் வெற்றி கனவு ஒரு முடிவுக்கு வந்தது.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.