NATIONAL

தேர்தலை முன்னிட்டு சிறப்பு போர்ட்டல் - மீடியா சிலாங்கூர்

3 ஆகஸ்ட் 2023, 2:19 AM
தேர்தலை முன்னிட்டு சிறப்பு போர்ட்டல் - மீடியா சிலாங்கூர்

ஷா ஆலம், ஆகஸ்ட் 3: ஒவ்வொரு தொகுதியின் நிகழ்நேர முடிவுகள் உட்பட மாநிலத் தேர்தல்களின் முன்னேற்றத்தைத் தெரியப்படுத்த ஒரு சிறப்பு போர்ட்டலை மீடியா சிலாங்கூர் அறிமுகப்படுத்தி உள்ளது.

அப்போர்ட்டல் 56 தொகுதிக்கான இடங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் கட்சி அறிக்கைகள் உள்ளிட்ட பிற அம்சங்களையும் கொண்டுள்ளது. மேலும், prnselangor.my மூலம் அதை நாடலாம்.

இந்த போர்ட்டலில் பதவியில் இருப்பவர்கள், வாக்காளர்களின் எண்ணிக்கை, வாக்குப்பதிவு முறை மற்றும் தேர்தல் வரலாறு உள்ளிட்ட அனைத்து இடங்களின் தரவு ஒப்பீடுகளை காண்பிக்கும் ஒரு பகுப்பாய்வு செயல்பாடும் உள்ளது.

இந்த போர்ட்டல் சிலாங்கூர் மந்திரி புசார் (கட்டமைப்பு) துணை நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது அதாவது ஜூலை 10 அன்று மீடியா சிலாங்கூர் அலுவலகத்தில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களால் தொடங்கப்பட்டது.

“இந்த சிறப்பு போர்ட்டல் மாநிலத் தேர்தலின் சமீபத்திய செய்திகள் மற்றும் முன்னேற்றங்கள் தெரிவிப்பது மட்டுமல்லாமல், தரவு மற்றும் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் அறிக்கையிடுவதற்கான ஒரு முன்னோடி திட்டமாகும்” என்று அவர் கூறினார்.

இந்த சிறப்பு போர்ட்டலை ஜூலை 10 முதல் பயன்படுத்தலாம். மேலும் இதில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பற்றிய தகவல்களை கண்டறிய முடியும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.