ECONOMY

ஆர்பரிப்பு, உற்சாகத்துடன்  தேர்தல் கொள்கை அறிக்கை  வெளியிட்டார்  சிலாங்கூர் மந்திரி புசார்.

31 ஜூலை 2023, 5:48 PM
ஆர்பரிப்பு, உற்சாகத்துடன்  தேர்தல் கொள்கை அறிக்கை  வெளியிட்டார்  சிலாங்கூர் மந்திரி புசார்.
ஆர்பரிப்பு, உற்சாகத்துடன்  தேர்தல் கொள்கை அறிக்கை  வெளியிட்டார்  சிலாங்கூர் மந்திரி புசார்.
ஆர்பரிப்பு, உற்சாகத்துடன்  தேர்தல் கொள்கை அறிக்கை  வெளியிட்டார்  சிலாங்கூர் மந்திரி புசார்.
ஆர்பரிப்பு, உற்சாகத்துடன்  தேர்தல் கொள்கை அறிக்கை  வெளியிட்டார்  சிலாங்கூர் மந்திரி புசார்.

செய்தி சு.சுப்பையா

ஷா ஆலம். ஜூலை.31- நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணி தொண்டர்கள் பெரும் ஆர்பரிப்புக்கு மத்தியில் உற்சாகத்துடன் சிலாங்கூர் மாநில தேர்தல் கொள்கை அறிக்கையை பரபரப்புடன் வெளியிட்டார் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் சாரி.

இரவு 8.00 க்கு எல்லாம் நம்பிக்கை கூட்டணி மற்றும் தேசிய முன்னணி தொண்டர்கள் மண்டபத்தில் குழுமியிருந்தனர். வேட்பாளர் வருகையும் தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. தொகுதி வாரியாக தொண்டர்கள் ஆரவாரத்துடன் தங்களது வேட்பாளர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர்.

இரவு 8.40 மணிக்கு மந்திரி புசார் ஷா ஆலம் ராசா மூடா மண்டபத்தை வந்தடைந்தார். அவரை எதிர்கொண்டு  வரவேற்க சிலாங்கூர் மாநில தேசிய முன்னணி தலைவர் டத்தோ வீரா மெகாட் சூல்கர்னையின், ஜ.செ.கா. சிலாங்கூர் மாநிலத் தலைவர் கோபிந் சிங் டியோ, சிலாங்கூர் மாநில அமனா தலைவர் ஹிஷாம் ஆகியோர் மண்டப முன் வாசலில் காத்திருந்தன்ர்.

மந்திரி புசார் வந்தவுடன் அவருடன் இணைந்து பிரமுகர் இருக்கைக்கு வந்தனர். மந்திரி புசாரை தொண்டர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். வரிசையாக நின்றிருந்த தொண்டர்களிடம் கைக் குலுக்கியபடியே பிரமுகர் இருக்கைக்கு வந்து சேர்ந்தார்கள் தலைவர்கள்.

சிலாங்கூர் முழுவதும் போட்டியிடும் 56 சட்டமன்ற வேட்பாளர்களும் குழுமியிருந்தனர். அனைவரும் உற்சாகத்துடன் காணப்பட்டனர். தொண்டர்கள் உற்சாகம் வெற்றியின் அறிகுறியாக தோன்றியது.

உடனே தேசிய கீதமும் சிலாங்கூர் பாடலும் ஒலி, ஒளிக்கப் பட்டது. இதனை தொடர்ந்து சிலாங்கூர் மாநில அமணா கட்சித் தலைவர் ஹிசாம் பிரச்சார உரையாற்றினார்.

அதன் பின்னர் தேசிய முன்னணித் தலைவர் டத்தோ வீரா மெகாட் சூல்கர்னையின் மற்றும் சிலாங்கூர் மாநில ஜ.செ.க. தலைவர் கோபிந் சிங் டியோ உரையாற்றினார்.

மூவரின் உரையும் தொண்டர்களை மேலும் உசுப்பி விட்டிருந்தது. இத்தருணத்தில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் உரையாற்றி தேர்தல் கொள்கை அறிக்கை வெளியீடு காணும் என்ற அறிவித்தவுடன் , கூடியிருந்த ஆயிரத்துக்கும் மேலான தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர்.

மிகவும் உற்சாகத்துடன் திடமான தன்னம்பிக்கையுடன் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ  ஸ்ரீ அமிருடின் தேர்தல் கொள்கை குறித்து விளக்கம் அளித்தார். ஒற்றுமை, கல்வி, சமயம், மாநில முன்னேற்றம், உயர்ந்த ஊதியம், சிறந்த சேவை, குழந்தை பராமரிப்பு, பெண்கள் மேம்பாடு, இளைஞர் உயர்வு, தொழில்நுட்பம், புதிய பொருளாதார மண்டலம்  மொத்ததில்  மாநிலத்தின்  சுபிட்சம் என 51 மேம்பாடுகளுக்கு   தேர்தல்  அறிக்கை முக்கியத்துவம்  அளித்துள்ளது.

அவைகளில் முதல் பகுதி

1.   வளமான பொருளாதாரம் மற்றும் தரமான கல்வி உயர் வருமான  வேலைவாய்ப்புகளுக்கு வழி

·நவீன விவசாயத் தொழில்கள், விண்வெளி, மின்சார ரயில் மற்றும் பேருந்துகள், 5G சேவைகள், ரோபாட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன், செயற்கை நுண்ணறிவு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் மின்-விளையாட்டுகளில் பொருளாதார மேம்பாட்டு முயற்சிகளை மையப்படுத்துதல்

·உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதன் மூலம் சிலாங்கூரில் இளைஞர்களுக்கு 100,000 அதிக ஊதியம் தரும் வேலை வாய்ப்புகளை வழங்குங்கள்

தென்கிழக்கு ஆசியாவில் சிலாங்கூர் ஒரு முக்கிய முதலீட்டு இடமாக மாறும் வகையில், போர்ட் கிள்ளான், கேரி தீவில் மூன்றாவது துறைமுகத்தை நிறுவ மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைக்கவும்.

·பிகேஎன்எஸ், எம்பிஐ மற்றும் தனியார் துறையுடன் சிலாங்கூர் மக்களுக்கு மலிவு விலையில்  வசதியான வீடுகளை  சிப்பாங், சபாக் பெர்ணம் மற்றும் கிள்ளான் ஆற்று ஒரங்களில் மூன்று புதிய நகரங்களை உருவாக்குதல்

·சிலாங்கூரை ஒரு கார்பன்-நடுநிலை மாநிலமாக மாற்றுவதற்கும், ESG தரங்களுக்கு அர்ப்பணிப்பை அதிகரிப்பதற்கும் மேலும் நிலையான முதலீட்டுப் பூங்காக்களை உருவாக்குதல்

·சிலாங்கூரை  தென்கிழக்கு ஆசியாவில் மிகவும் நேர்த்தியான  5G மாநிலமாக மாற்றும்  வகையில் 5G இணைப்பை  மேம்படுத்துவது

·கிள்ளான்-  கோலா சிலாங்கூர், தஞ்சோங் கராங் மற்றும் சபாக் பெர்ணமுக்கு ரயில் சேவைகளை இணைக்கும் ஜஜரன் கித்தா சிலாங்கூர் உருவாக்கம்

·கேஎல்ஐஏவில் உள்ள ரயில் பாதையை தஞ்சோங் சிப்பாட் மற்றும் சுங்கை பீலேக்குடன் இணைப்பதன் மூலம் சிலாங்கூர் மேற்கு கடற்கரைப் பகுதி ஒரு ரயில் சேவை வழித்தடமாக மாறும்.

·ஆப்பிள், சீமென்ஸ், ஃபெஸ்டோ மற்றும் டசால்ட் சிஸ்டம்ஸ் போன்ற உயர் தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து 10,000 சிலாங்கூர் இளைஞர்களுக்கு TVET பயிற்சி அளிப்பது

·200,000 ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளி மாணவர்களை  இலக்காகக் கொண்டு சிலாங்கூர் இலவச மக்கள் கல்வித் திட்டத்தை  விரிவுபடுத்துதல்

மலாய், ஆங்கிலம், மாண்டரின், தமிழ், ஜப்பானிய மற்றும் கொரியன் போன்ற  மொழி கற்றல்  இலவச வகுப்புகளை வழங்குவது.

நமது சிலாங்கூர் மாணவர் உதவி திட்டத்தில் ஒவ்வொரு பட்டப்படிப்பு மாணவருக்கும் RM1,500 தொகை  வழங்குவது

2,000 சிலாங்கூர்  இளைஞர்களுக்கு  மாதந்தோறும் RM1,500  சம்பளத்துடனான தொழில்துறை பயிற்சி வாய்ப்புகளை (இன்டர்ன்ஷிப்) வழங்குதல்

5 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் 10,000 கித்தா சிலாங்கூர் கிரியேட்டிவ் தூதர்களை இலக்காகக் கொண்டு கித்தா சிலாங்கூர் டிஜிட்டல் மானியத்தை உருவாக்குவதன் மூலம் இளம் தலைமுறை மற்றும் இளைஞர்களின் படைப்பு திறன்கள் தூண்டுதல்

இது போன்று  மேலும் 4 பகுதிகளை  மந்திரி புசார்  விளக்கிய பின்  வந்திருந்த 56 வேட்பாளர்கள் ஒருவர் பின் ஒருவராக தொண்டர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இறுதியாக மந்திரி புசார் பெயர் அறிவித்தவுடன் 56 வேட்பாளர்களும் ஒருங்கே குழுமியிருந்த புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.