ECONOMY

கோத்தா கெமுனிங் தொகுதி ஹராப்பான் தேர்தல் நடவடிக்கை அறையின் திறப்பு விழா இன்றிரவு நடைபெறும்

30 ஜூலை 2023, 3:27 AM
கோத்தா கெமுனிங் தொகுதி ஹராப்பான் தேர்தல் நடவடிக்கை அறையின் திறப்பு விழா இன்றிரவு நடைபெறும்

ஷா ஆலம், ஜூலை 30- கோத்தா கெமுனிங் தொகுதியின் பக்கத்தான் ஹராப்பான் தேர்தல் இயந்திரம் மற்றும் நடவடிக்கை அறையின் திறப்பு விழா இன்று ஜூலை 30ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு இங்குள்ள தாமான்  ஸ்ரீமூடா ஜாலான் தெராஜூ 25/67 எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில் டாமன்சாரா நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.கணபதிராவ், செந்தோசா சட்டமன்ற உறுப்பினரும் கோத்தா ராஜா கெஅடிலான் தொகுதி தலைவருமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

கோத்தா கெமுனிங் தொகுதியில் பக்கத்தான்  ஹராப்பான் சார்பில் பிரகாஷ் த/பெ சாம்புநாதன் போட்டியிடுகிறார். வழக்கறிஞரான இவர் சிலாங்கூர் மாநில ஜசெகவின் சட்ட மையத்தின் உறுப்பினராகவும் உள்ளார்.

இத்தேர்தலில் இந்த தொகுதி மும்முனைப் போட்டியை எதிர்நோக்குகிறது. பக்கத்தான் சார்பில் ஜசெகவை சேர்ந்த பிரகாஷ் போட்டியிடும் வேளையில் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் கெராக்கான் கட்சியைச் சேர்ந்த சியு ஜி காங் மற்றும் பார்ட்டி ராக்யாட் மலேசியா (பிஆர்எம்.) சார்பில் கே. கே. குணசேகரன் ஆகியோர் களம் காண்கின்றனர்.

இந்த தேர்தலில்  இத்தொகுதியை பக்கத்தான் ஹராப்பான் தக்க வைத்துக் கொள்வதை உறுதி செய்வதற்காக அக்கூட்டணியின் உறுப்புக் கட்சியினர் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.