ALAM SEKITAR & CUACA

கோலசிலாங்கூரில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 பேர் போட்டி

29 ஜூலை 2023, 9:20 AM
கோலசிலாங்கூரில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 பேர்  போட்டி
கோலசிலாங்கூரில் மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு 7 பேர்  போட்டி

செய்தி ;- மா.சிவக்குமார்

கோலசிலாங்கூர் ஜூலை  29 ;-  கோலசிலாங்கூர்  சட்டமன்ற  தொகுதிகளுக்கான  வேட்புமனு தாக்கல் இன்று காலை  முதல் சுமூகமாக நடைபெற்றது.. இதில்    புக்கிட் மெலாவத்தி   தொகுதிக்கு  ஹராப்பான் சார்பில் பி.கே.ஆர்.தலைவர் தீபன் சுப்ரமணியமும்,  பெரிக்காத்தான்  நேஷனலுக்கு நோர்ஸாலே பின் யாஹ்யா இருவரும் நேரடியாக போட்டியில் களம் இறங்குகின்றனர்.

அதே சமயத்தில் ஈஜோக் தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது.அதில் பாக்காத்தான் ஹரப்பான் ஆசிரியர் ஹாமிடி அப்துல் மானன், பெரிக்காத்தான் நெஷனலுக்கு ஜெப்ரி பின் மேனனும், போட்டியிடுகின்றனர். அதே

வேளையில் அங்கு   மூன்றாவது  வேட்பாளராக (ஈஜோக் தொகுதியில்) சுயேட்சையாக தான் கேட் கியோங்கும் போட்டியிடுகின்றார்.

மற்றுமொறு தொகுதியான ஜெராம் தொகுதியில்  பாக்காத்தான் ஹரப்பான்   ஜொஹாயா இப்ராஹிம்  (கோலசிலாங்கூர் அம்னோ தலைவர்)  பெரிக்காத்தான் நேசினலுக்கு ஹாரிசான் பின் ஹாசனும் நேரடியாக போட்டி இடுகின்றனர்

ஜெராம் தொகுதியில்  பரபரப்பாக நடைபெற்ற இந்த வேட்புமனு தாக்கலில் பாக்காத்தான் ஹரப்பான் ஆதரவாளர்களும்,பெரிக்காத்தான் நேஷனல் ஆதரவாளர்களும் நிறைய பேர்கள் கலந்து கொண்டு , அவரவர்  ஆதரவு அணிக்கு ஆதரவாக  கோஷம்  எழுப்பி , அவ்விடத்தை பரபரப்பாக  வைத்திருந்தனர்.

ஆனால்  எந்த ஒரு  அசம்பாவிதமும்  இன்றி   இன்றைய  வேட்புமனு தாக்கல் சுமூகமாக நடைபெற்று சுமார் 1:00 -மணியளவில் முடிவுற்றது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.