NATIONAL

நெகிரியில் அம்னோ துணைத் தலைவர், ஜசெக தலைமைச் செயலாளருக்கு நேரடிப் போட்டி

29 ஜூலை 2023, 8:54 AM
நெகிரியில் அம்னோ துணைத் தலைவர், ஜசெக தலைமைச் செயலாளருக்கு நேரடிப் போட்டி

கோலாலம்பூர், ஜூலை 29- நெகிரி செம்பிலானில் களம் இறங்கியுள்ள

அம்னோ தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது ஹசான் மற்றும்

ஜசெக தலைமைச் செயலாளர் அந்தோணி லோக் ஆகியோர் நேரடிப்

போட்டியைத் இத்தேர்தலில் எதிர்நோக்குகின்றனர்.

ரந்தாவ் தொகுதியின் நடப்பு உறுப்பினராக இருக்கும் தற்காப்பு

அமைச்சரான டத்தோஸ்ரீ ஹசான் பெரிக்கத்தான் நேஷனல்-பாஸ்

வேட்பாளர் ரோஸ்மால் மலாக்கானுடன் நேரடிப் போட்டியை

எதிர்நோக்குகிறார்.

ராந்தாவ் தொகுதியில் கடந்த 2004 முதல் ஐந்து தவணைகளாக முகமது

ஹசான் சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார் என்பது

குறிப்பிடத்தக்கது.

ஜசெக தலைமைச் செயலாளரான அந்தோணி லோக் சென்னா சட்டமன்றத்

தொகுதியைத் தற்காத்துக் கொள்ள போட்டியிடும் வேளையில் அவர்

எதிர்த்து பெரிக்கத்தான்-பெர்சத்து வேட்பாளர் ரோஸ்மாடி அரிப்

போட்டியிடுகிறார்.

இந்த தொகுதியில் அந்தோணி லோக் கடந்த 2013ஆம்

ஆண்டு முதல் தன் வசம் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்த்தக்கது

இதனிடையே, கெடா, கிளந்தான் மற்றும் திராங்கானு மாநில மந்திரி

புசார்கள் பக்கத்தான் –பாரிசான் கூட்டணி வேட்பாளர்களிடமிருந்து நேரடிப்

போட்டியை எதிர்நோக்குகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.