NATIONAL

பெர்மாத்தாங் தொகுதியில் ஹராப்பான்-பெரிக்கத்தான் இடையே நேரடிப் போட்டி

29 ஜூலை 2023, 6:28 AM
பெர்மாத்தாங் தொகுதியில் ஹராப்பான்-பெரிக்கத்தான் இடையே நேரடிப் போட்டி

கோலாலம்பூர், ஜூலை 29: பெர்மாத்தாங் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர்களிடையே நேரடிப் போட்டி நிலவுகிறது. பக்கத்தான்

ஹராப்பான் சார்பில் முகமது யாஹ்யா மாட் ஷாரி மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் நுருள் ஷியாஸ்வானி நோ ஆகியோர் களம் காண்கின்றனர்.

பெர்மாத்தாங் தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கல் தஞ்சோங் காராங்

தோட்டத் தொழில் மேலாண்மைக் கழக மண்டபத்தில் இன்று காலை

நடைபெற்றது.

கோலக் கிள்ளான் தொகுதியில் மும்முனைப் போட்டி

கோலக்கிள்ளான் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அத்தொகுதியின் நடப்பு உறுப்பினரான அஸ்மிஸாம் ஜமான் ஹுரி பக்கத்தான் ஹராப்பான் சார்பில் மீண்டும் களம் காணவுள்ள நிலையில்

அவரை எதிர்த்து பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் வான் ஹஸ்ரினா வான் ஹசான் மற்றும் பிஆர்எம் எனப்படும் பார்ட்டி ராக்யாட் கட்சியின் வேட்பாளர் சைட் அகமது புத்ரா இசா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் நேரடிப் போட்டி

தஞ்சோங் சிப்பாட் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான் மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் ஆகிய கட்சிகள் நேரடியாக களத்தில் இறங்கியுள்ளன. பக்கத்தான் ஹராப்பான் சார்பில் தொகுதியின் நடப்பு உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான புர்ஹான் அமான் ஷா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பெரிக்கத்தான் சார்பில் சபிரின் மர்சோனோ களம் காண்கிறார்.

மேரு தொகுதியில் மூவர் போட்டி

மேரு சட்டமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. பக்கத்தான் ஹராப்பான் சார்பில் மரியாம் அப்துல் ரஷிட் களம் இறக்கப்பட்டுள்ளார். புதுமுக வேட்பாளரான இவர் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் ஹஸ்னிஷாம் அட்ஹாட் மற்றும் பிஎஸ்எம் எனப்படும் மலேசிய சோசலிச கட்சியைச் சேர்ந்த எம்.சிவரஞ்சனி ஆகியோரை எதிர்

கொள்கிறார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.