NATIONAL

சிலாங்கூரில் பிற்பகல் 3 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை

29 ஜூலை 2023, 6:15 AM
சிலாங்கூரில் பிற்பகல் 3 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை

ஷா ஆலம், ஜூலை 29: சிலாங்கூரில் உள்ள நான்கு மாவட்டங்களில் இன்று பிற்பகல் 3 மணி வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அவை சபாக் பெர்ணம், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய நான்கு மாவட்டங்கள் ஆகும் என முகநூல் மூலம் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தகவல் அளித்துள்ளது.

மலாக்கா, புத்ராஜெயா, பேராக், நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூரில் உள்ள சில பகுதிகளிலும் இதே வானிலை தான் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழை பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.