NATIONAL

மாநிலத் தேர்தல்- 26 தொகுதிகளில் நேரடிப் போட்டி

29 ஜூலை 2023, 6:13 AM
மாநிலத் தேர்தல்- 26 தொகுதிகளில் நேரடிப் போட்டி

ஷா ஆலம், ஜூல 29- சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளுக்கு

இன்று வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்ற வேளையில் அவற்றில் 26

தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது.

மேலும் 25 தொகுதிகளில் மும்முனைப் போட்டியும் ஐந்து தொகுதிகளில்

நான்கு முனைப் போட்டியும் நிலவுகிறது.

செமினியில் நேரடிப் போட்டி

செமினி சட்டமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி வேட்பாளர் வான்

ஜூலைக்கா அனுவாவுக்கும் பெரிக்கத்தான் நேஷனல் வேட்பாளர் நுஷி

மாபோஸுக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.

சுங்கை காண்டீஸ் தொகுதியில் மூன்று முனைப் போட்டி நிலவுகிறது.

பக்கத்தான் ஹராப்பான் சார்பில் முகமது ஜவாவி அகமது முக்னி,

பெரிக்கத்தான் நேஷனல் சார்பில் வான் ஸஹாரினுரின் அகமது மற்றும்

மூடா கட்சி சார்பில் அஃப்ரியானா சகிரா ஷாரிப் ஆகியோர்

போட்டியிடுகின்றனர்.

ஈஜோக் தொகுதியில் மும்முனைப் போட்டி

ஈஜோக் தொகுதியில் பக்கத்தான் ஹராப்பான், பெரிக்கத்தான் நேஷனல்

மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். பக்கத்தான்

சார்பில் அமிடி அப்துல் மானானும் பெரிக்கத்தான் சார்பில் ஜெப்ரி

மேஜானும் சுயேச்சையாக டான் சாட் கியோங்கும் இத்தொகுதியில்

போட்டியிடுகின்றனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.