ECONOMY

பெரிக்காத்தான் தலைவர்களைப்  பொது விவாதத்திற்கு   அழைத்தார்  ரபிசி

29 ஜூலை 2023, 12:42 AM
பெரிக்காத்தான் தலைவர்களைப்  பொது விவாதத்திற்கு   அழைத்தார்  ரபிசி

செய்தி ; சு.சுப்பையா

 

பெ.ஜெயா.ஜூலை.28- பெரிக்காத்தான் தலைவர்கள் பொது விவாதத்திற்கு வாருங்கள் என்று பொருளாதாரத் துறை அமைச்சர் ரபிசி ரம்லி பகிரங்க அழைப்பு விடுத்தார். நாட்டை தொடர்ந்து சிறப்பாக வழி நடத்த என்ன பொருளாதாரத் திட்டங்கள் உள்ளன என்பதை பொது விவாதத்தில் விவாதிப்போம் என்றார்.

6 மாநிலங்களில் தற்போது தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.  இந்த மாநிலங்களில் பொருளாதாரத் திட்டம் குறித்து பொது விவாதம் செய்வோம் என்று முன்பே பல முறை அழைப்பு விடுத்து விட்டேன்.

முதன் முதலில் முன்னாள் பொருளாதாரத் துறை அமைச்சர் அஸ்மின் அலியைப் பொது விவாதத்திற்கு அழைத்தேன். அவர் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். இதே போல் கெடா மாநிலப் பாஸ் கட்சியைச் சேர்ந்த டத்தோ சனுசியையும் அழைத்தேன் அவரும மறுப்பு தெரிவித்து விட்டார்.

பெரிக்காத்தான் கட்சியில் பெரும் பொருளாதார மேதை போல் புத்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினரும் பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றத்துக்கு வெளியே பேசி வருகின்றனர்.

பாச்சோக் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது சாஹிர், இதே போல புத்ரா ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் ராட்சி சிடின் ஆவார்கள். இவர்களைப் பொது விவாதத்துக்கு அழைக்கிறேன் என்று கூறினார்.

தேர்தலில் பிரச்சாரக் கூட்டத்தை நடத்துவதை விடப் பொது விவாதங்களில் மக்கள் தெளிவு பெறுவார்கள். தேர்தல் பிரச்சாரக் கூட்டம் தேவையில்லை.

ஆனால் பெரிக்காத்தான் கூட்டணித் தலைவர்கள் பொது விவாதத்திற்கு வர மாட்டார்கள். ஆனால் அவர்கள் பிரச்சாரக் கூட்டங்களில் அவதூறுகளை பரப்பி நாட்டின் பொருளாதார மேம்பாட்டை சீர் குலைக்க முயற்சிக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற தொகுதிக்குள் உள்ள புக்கிட் காசிங், ஸ்ரீ செத்தியா, தாமான் மேடான் ஆகிய 3 சட்ட மன்றங்கள் உள் அடக்கிய பிரச்சாரக் கூட்டம் தாமான் மேடானில் நடைபெற்றது. இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் உரையாற்றும் பொது இந்தப் அழைப்பை விடுத்தார்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.