NATIONAL

கோலாலம்பூர்-காராக் விரைவுச் சாலையில் ஏற்பட்ட  குழியால்  போக்குவரத்து பாதிப்பு

26 ஜூலை 2023, 2:34 AM
கோலாலம்பூர்-காராக் விரைவுச் சாலையில் ஏற்பட்ட  குழியால்  போக்குவரத்து பாதிப்பு
கோலாலம்பூர்-காராக் விரைவுச் சாலையில் ஏற்பட்ட  குழியால்  போக்குவரத்து பாதிப்பு

குவாந்தான், ஜூலை 26: கோலாலம்பூர்-காராக் விரைவுச் சாலையின் கிழக்கு மற்றும் மேற்கு திசைகளில் கிலோ மீட்டர் 66.1 இல் சாலை உள்வாங்கியதால் ஏற்பட்ட குழியால்  சாலையில் போக்குவரத்து பாதிக்கப் பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை  நிர்வாகம்  தனது முகநூல் பக்கத்தில், குவாந்தான் திசையில் இருந்து கோலாலம்பூர் செல்லும் பயனர்கள் கிழக்கு பெந்தோங் சந்திப்பில்  வெளியேறி மேற்கு பெந்தோங் சந்திப்பில் மீண்டும் நுழையுமாறு கேட்டுக் கொண்டது.

"கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் செல்லும் பயனர்கள் பெந்தோங் மேற்கு சந்திப்பில் இருந்து வெளியேறி மீண்டும் பெந்தோங் கிழக்கு சந்திப்பில் நுழையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" என்று நேற்று இரவு பதிவேற்றப்பட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர்-காராக் நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை உள் வாங்கியதன் காரணமாகச் சாலையின் மேற்பரப்பை பெரிய  குழிகளை காட்டும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.