NATIONAL

  ஜப்பான்  ஓபன் பூப்பந்து போட்டியில் , நான்கு தேசிய இரட்டையர்கள் அணிகள் ஆரம்ப சுற்றில் வென்று அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது

25 ஜூலை 2023, 2:04 PM
  ஜப்பான்  ஓபன் பூப்பந்து போட்டியில் , நான்கு தேசிய இரட்டையர்கள் அணிகள் ஆரம்ப சுற்றில் வென்று அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது

கோலாலம்பூர், ஜூலை 25: இப்பொழுது  டோக்கியோவில் நடைபெறும் 2023 ஜப்பான் ஓபன்  பூப்பந்து  சாம்பியன்ஷிப் போட்டியின் தொடக்க சுற்றில் மலேசியாவின் நான்கு இரட்டையர்  அணி ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கத்தை பெற்றனர்.

யோயோகி ஃபர்ஸ்ட் ஜிம்னாசியத்தில் நடந்த இப்போட்டியில், நாட்டின் முன்னணி பெண்கள் இரட்டையர் பேர்லி டான்-எம். தீனா   இணை 21-11, 9-21, 21-19 என்ற செட் கணக்கில் சீன ஜோடி லியு ஷெங் சு - டான் நிங்கைத் தோற்கடித்து   இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் முதல் சுற்று ஆட்டத்தில் சீனாவைச் சேர்ந்த சென் கிங் சென்-ஜியா யி ஃபேன், கனடிய ஜோடியான கேத்தரின் சோய்-ஜோசஃபின் வூவை தோற்கடித்தால், இரண்டாவது போட்டி பேர்லி மற்றும் தீனாவுக்கு  கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மற்ற இரண்டு மலேசிய கலப்பு இரட்டையர்களான சென் டாங் ஜீ-தோ ஈ வெய் மற்றும் சான் பெங் சூன்-செயா யீ சீ ஆகியோரும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினர்.

உலகத் தரவரிசையில் 14-வது இடத்தில் இருக்கும் டாங் ஜீ-ஈ வெய், உலகின் 9-ஆவது தரவரிசையில் உள்ள  நெதர்லாந்தின் ராபின் டேபிலிங்-செலினா பீக் ஜோடியை 21-15, 21-18  என்ற செட் கணக்கில் வென்று  அதிர்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

சீன இரட்டையர்கள்  ஜப்பானிய இரட்டையர்களான ஹிரோகி மிடோரிகாவா  - நட்சு சைட்டோ ஜோடியை 21-8, 21-13 என்ற செட் கணக்கில் தோற்கடித்தது அடுத்து டாங் ஜீ-ஈ வெய் முதல் தரவரிசையில் உள்ள ஜெங் சி வெய்-ஹுவாங் யா கியோங்கை சந்திக்கின்றனர்.

மேலும் பெங் சூன்-  செயா யீ சீ  ஜோடி தாய்லாந்து ஜோடியான சுபாக்  ஜொம்கொ-  சுபிசாஸரா  வை எதிர்கொள்கிறது,

தேசிய தொழில்முறை ஆடவர் இரட்டையர் ஓங் யூ சின்-டியோ ஈ யி இன்று 36 நிமிடங்களில்  பிரான்சின் லூகாஸ் கோர்வி-ரோனான் லாபரை 21-15, 21-18 என்ற நேர் செட் கணக்கில் வென்று தேசிய அணியினர் சிறப்பான ஆட்டத்தை   காட்டினர்.

ஆறாம் நிலை ஜோடி, சீனாவின் சென் போ யாங்-லியு யி அல்லது நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான  தைவானின் லீ யாங்-வாங் சி-லின் இடையேயான தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி  காலிறுதி  ஆட்டத்தில்  எதிர்கொள்வது என்பதை   தீர்மானிக்கும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.