NATIONAL

ஆறு புதுமுகங்களை உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியலை சிலாங்கூர் அமானா வெளியிட்டது

24 ஜூலை 2023, 4:32 AM
ஆறு புதுமுகங்களை உள்ளடக்கிய வேட்பாளர் பட்டியலை சிலாங்கூர் அமானா வெளியிட்டது

ஷா ஆலம், ஜூலை 24-  எதிர்வரும் மாநிலத் தேர்தலில் பார்ட்டி அமானா

ராக்யாட் கட்சி (அமானா) சிலாங்கூர் மாநிலத்தின் ஒன்பது தொகுதிகளில்

போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் ஆறு புதுமுகங்களை கட்சி

களமிறக்கிய வேளையில் சிலாங்கூர் மாநில அமானா கட்சித் தலைவர்

இஞ்சினியர் இஷாம் ஹஷிம் பண்டான் இண்டா தொகுதியில் மீண்டும்

போட்டியிடவுள்ளார்.

சிலாங்கூர் மாநிலத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை

நேற்று வெளியிட்ட கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ முகமது சாபு, மோரிப்

தொகுதியை ஹஸ்னுள் பகாருடினும் சுங்கை ராமால் தொகுதியை

மஸ்வான் ஜோஹாரும் தற்காத்துக் கொள்ளவுள்ளனர் என்றார்.

அமானா கட்சி சார்பில் சிலாங்கூரில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள்

பட்டியல் வருமாறு-

பண்டான் இண்டா- இஞ்சினியர் இஷாம் ஹஷிம்

சபாக் தொகுதி- சமாட் ஹஷிம் (புது முகம்)

உலு பெர்ணம்- அம்ரான் முகமது ஷியாகிர் ( புது முகம்)

தாமான் டெம்ப்ளர்- அன்ஃபால் ஷாரி (புது முகம்)

பத்து தீகா- டேனியல் அல்-ரஷிட் ஹருண் ( புது முகம்)

சுங்கை ராமால்- மஸ்வான் ஜோஹார்

ஸ்ரீ செர்டாங்- அப்பாஸ் அஸ்மி ( புது முகம்)

மேரு- சித்தி மரியம் அப்துல் ரஷிட் ( புது முகம்)

மோரிப்- ஹஸ்னுள் பகாருடின்

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 56 தொகுதிகளில் பக்கத்தான் ஹராப்பான்-

பாரிசான் கூட்டணியின் சார்பில் கெஅடிலான், அமானா, ஜசெக, அம்னோ

ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

இத்தேர்தலில் சிலாங்கூரில் 20 தொகுதிகளில் கெஅடிலான் கட்சியும் 12

தொகுதிகளில் பாரிசான் நேஷனலும் ஒன்பது தொகுதிகளிலும்

அமானாவும் போட்டியிடவுள்ளன. இக்கட்சிகள் தங்கள் வேட்பாளர்

பட்டியலை வெளியிட்டுள்ள நிலையில் ஜசெக தனது வேட்பாளர்

பட்டியலை இன்று பிற்பகல் அறிவிக்கவுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.