NATIONAL

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடனான ஒரு பொது உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு

23 ஜூலை 2023, 9:50 AM
டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடனான ஒரு பொது உரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு

ஷா ஆலம், ஜூலை 23: நாளை இரவு செக்‌ஷன் 15 உள்ள டேவான் கரங்க்ராஃப்வில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடனான ஒரு பொது உரையாடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சினார் ஹரியான் தொகுத்து வழங்கும் இந் நிகழ்ச்சி இரவு 8.30 மணிக்குத் தொடங்கும். அதில் உள்ளூர் பிரச்சினைகள் தொடர்பாக மாநில தலைவர்களுடன் கேள்வி – பதில் அங்கம் இடம்பெறும். பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த அமர்வு பிரபல நடிகர் அசார் சுலைமான் அவர்களால் நடத்தப்படும். மேலும், இதை www.sinarharian.com.my என்ற இணைப்பில் பார்க்கலாம்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் https://docs.google.com/forms/d/e/1FAIpQLSf8P9-e6GHnENpiSpswhpe1MCB_X_uL5EtYseh2KswnxUtfIA/viewform  என்ற இணைப்பில் வருகையை உறுதிசெய்ய வேண்டும்.

நாட்டின் தற்போதைய பிரச்சனைகளை அவிழ்க்க உள்ளூர் தலைவர்கள் மற்றும் கல்வியாளர்கள் இடம்பெறும் நிகழ்ச்சியை சினார் ஹரியான் வழக்கமாக ஏற்பாடு செய்கிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.