ECONOMY

மாநிலத் தேர்தல் மற்றும் 56 தொகுதி நிலவரங்களை அறிந்து கொள்ள உதவும் சிறப்பு அகப்பக்கம்- மீடியா சிலாங்கூர் அறிமுகம்

19 ஜூலை 2023, 6:27 AM
மாநிலத் தேர்தல் மற்றும் 56 தொகுதி நிலவரங்களை அறிந்து கொள்ள உதவும் சிறப்பு அகப்பக்கம்- மீடியா சிலாங்கூர் அறிமுகம்

ஷா ஆலம், ஜூலை 19- மாநிலத் தேர்தல் நிலவரங்கள் மற்றும் தேர்தல் முடிவுகள் தொடர்பான ஆகக் கடைசி தகவல்களைத் தாங்கி வரும் சிறப்பு அகப்பக்கத்தை மீடியா சிலாங்கூர் சென். பெர்ஹாட் (மீடியா சிலாங்கூர்) அறிமுகப்படுத்தியுள்ளது.

Prnselangor.my  என்ற அந்த அகப்பக்கம் 56 சட்டமன்றத் தொகுதிகள் குறித்த தகவல்கள், புள்ளி விபரங்கள் மற்றும் கட்சியின் தேர்தல் கொள்கையறிக்கை ஆகிய அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளது.

மேலும், சட்டமன்றத் தொகுதிகளின் நடப்பு உறுப்பினர்கள், மொத்த வாக்காளர் எண்ணிக்கை, இனவிகிதாசாரம் மற்றும் தேர்தல் வரலாறு உள்ளிட்ட தகவல்களையும் இந்த அகப்பக்கம் உள்ளடக்கியிருக்கும்.

மந்திரி பெசார் கழகத்தின் (எம்.பி.ஐ.) துணை நிறுவனமான மீடியா சிலாங்கூரினால் உருவாக்கப்பட்ட இந்த அகப்பக்கத்தை மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்த ஜூலை 10ஆம் தேதி தொடக்கி வைத்தார்.

மாநிலத் தேர்தல் தொடர்பான மிக அண்மையத் தகவல்களை உடனுக்குடன் தெரிவிப்பதோடு மட்டுமல்லாது தரவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் தகவல்களை வெளியிடும் முன்னோடித் திட்டமாகவும் இது விளங்குகிறது.

ஜூலை 10ஆம் தேதி தொடங்கி பொது மக்கள் இந்த அகப்பக்கத்தைப் பார்வையிடலாம். இந்த அப்பக்கம் மூலம் பொது மக்கள் வழிகாட்டுதல்களைப் பெறவும் வாக்களிப்பு தொடர்பான விபரங்களைச் சரிபார்க்கவும் இயலும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.