NATIONAL

ஒரு வயதுடைய பெண் குழந்தை நான்கு சக்கர வாகனம் மோதி இறந்தது

10 ஜூலை 2023, 3:27 AM
ஒரு வயதுடைய பெண் குழந்தை நான்கு சக்கர வாகனம் மோதி இறந்தது

கெமாமன், ஜூலை 10: கம்போங் டராத், கெர்தேவில் ஒரு வயதுடைய பெண் குழந்தை தனது உறவினர் ஓட்டி வந்ததாக நம்பப்படும் நான்கு சக்கர வாகனம் மோதி இறந்தது.

அக்குழந்தை (ஷசா ஷஸ்வினா சஹாரா முகமட் ஷசாலி) தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கெமாமன் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஹன்யான் ரம்லான் தெரிவித்தார்.

“இரவு 8.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு அழைப்பு வந்தது. முதற்கட்ட விசாரணையில், அந்த வாகனத்தை அக்குழந்தையின் 19 வயது உறவினர் ஓட்டிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

ஓட்டுநர் வாகனத்தை பின்னோக்கி செலுத்தும் போது இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

"அக்குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக கெமாமன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது மற்றும் சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது," என்று ஹன்யான் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.