NATIONAL

இன்று இரவு வரை ஏழு மாவட்டங்களில் கனமழை

6 ஜூலை 2023, 11:23 AM
இன்று இரவு வரை ஏழு மாவட்டங்களில் கனமழை

ஷா ஆலம், ஜூலை 6: இன்று சிலாங்கூரில் உள்ள ஏழு மாவட்டங்களில் இரவு வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோலா லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று  முகநூல் மூலம் மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

இதே வானிலைதான்கோலாலம்பூர், புத்ராஜெயா, பேராக், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான், ஜொகூர், சரவாக் மற்றும் சபாவில் உள்ள பல மாவட்டங்களிலும் ஏற்படக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.