NATIONAL

மாநிலத் தேர்தல்- ஜூலை 29ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல், ஆகஸ்டு 12ஆம் தேதி வாக்களிப்பு

5 ஜூலை 2023, 5:00 AM
மாநிலத் தேர்தல்- ஜூலை 29ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல், ஆகஸ்டு 12ஆம் தேதி வாக்களிப்பு

ஷா ஆலம், ஜூலை 5- சிலாங்கூர், நெகிரி செம்பிலான், பினாங்கு, கெடா, கிளந்தான், திரங்கானு ஆகிய ஆறு மாநிலங்களில் வரும் ஆகஸ்டு 12ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அந்த ஆறு மாநிலங்களிலும் வேட்பு மனுத்தாக்கல் ஜூலை 29ஆம் தேதி நடைபெறவுள்ள வேளையில் தொடக்க வாக்களிப்பு ஆகஸ்டு 8ஆம் தேதி நடைபெறும். இந்த தேர்தலில் பிரசாரம் மேற்கொள்வதற்கு இருவார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

புத்ரா ஜெயாவிலுள்ள தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் எஸ்.பி.ஆர். தலைவர் டான்ஸ்ரீ அப்துல் கனி சாலே இதனைக் கூறினார். இந்த செய்தியாளர் சந்திப்பு தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

மாநில சட்டமன்றங்களைக் கலைப்பது தொடர்பான அறிக்கை சம்பந்தப்பட்ட ஆறு மாநில சட்டமன்ற சபாநாயகர்களிடமிருந்து கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அங்கு தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.