NATIONAL

தேசியக் கலப்பு இரட்டையர் அணி ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பை இரண்டாம் இடத்தை வென்றது

1 ஜூலை 2023, 10:17 AM
தேசியக் கலப்பு இரட்டையர் அணி ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பை இரண்டாம் இடத்தை வென்றது

கோலாலம்பூர், ஜூலை 1: தேசிய கலப்பு இரட்டையர் அணியான இவான் யுவன்-ரேச்சல் அர்னால்ட் ஜோடி நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய ஜோடியிடம் 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்து. இதன் மூலம் 2023 ஆசிய கலப்பு இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன் ஷிப்பில் இரண்டாம் இடத்தை வென்றனர்.

 

சீனாவின் ஹாங்சோ ஒலிம்பிக் விளையாட்டு மையத்தில் நடந்த போட்டியில் ஹரிடர் பால் சிங்-தீபிகா பல்லிக்கால் ஜோடி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், இவான்-ரேச்சல் 10-11 என்ற கணக்கில் முதல் செட்டில் தோல்வியடைந்தனர்.

 

பிறகு இரண்டாவது செட்டில், இவான்-ரேச்சல் ஸ்கோரை சமன் செய்ததால் நம்பிக்கை அதிகரித்தது. இருப்பினும், மூன்றாம் செட்டில் அவர்களும் 8-11 என தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தை அடைந்தனர்.

 

இதற்கிடையில், மற்றொரு தேசியக் கலப்பு இரட்டையர் அணியான முகமது சயாபிக் கமால்-ஐஃபா அஸ்மான் ஜோடி 11-8 மற்றும் 11-10 என்ற கணக்கில் இந்திய ஜோடியான அபய் சிங்-அனாஹத் சிங் ஜோடியை வீழ்த்தி மூன்றாம் இடத்தை வென்றது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.