NATIONAL

நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூலை முதல் தேதி கலைக்கப்படும்

28 ஜூன் 2023, 9:03 AM
நெகிரி செம்பிலான் சட்டமன்றம் ஜூலை முதல் தேதி கலைக்கப்படும்

சிரம்பான், ஜூன் 28- மாநிலத் தேர்தலை நடத்துவதற்கு ஏதுவாக நெகிரி

செம்பிலான் சட்டமன்றம் வரும் சனிக்கிழமை (ஜூலை 1) கலைக்கப்படும்.

சட்டமன்றத்தைக் கலைப்பது தொடர்பில் பரிந்துரைக்கப்பட்ட இந்த

தேதிக்கு யாங் டி பெர்த்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் இப்னி

அல்மார்ஹூம் துவாங்கு முனாவிரிடமிருந்து ஒப்புதல் கிடைத்துள்ளதாக

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஹருண் கூறினார்.

மாநிலத் தேர்தலுக்கு வழி விடும் வகையில் சட்டமன்றத்தைக் கலைப்பது

தொடர்பான அறிவிப்புக் கடிதத்தில் கையெழுத்தைப் பெறுவதற்காக யாங்டி

பெர்துவான் பெசாரை இன்று காலை நான் சந்தித்தேன்.

இந்த சந்திப்பின் அடிப்படையில் வரும் ஜூல் 1 தேதி மாநில சட்டமன்றம்

கலைப்பது உறுதியாகி விட்டது என்று இங்குள்ள விஸ்மா நெகிரியில்

நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

முன்னதாக, சட்டமன்றத்தைக் கலைப்பதற்கான ஒப்புதலை

ஆட்சியாளரிடமிருந்து பெறுவதற்காக அமிருடின் இன்று காலை

இஸ்தானா ஹிங்காப் வந்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.