NATIONAL

மோட்டார் சைக்கிள் – எம்பிவி சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் பலி

25 ஜூன் 2023, 2:11 PM
மோட்டார் சைக்கிள் – எம்பிவி சம்பந்தப்பட்ட விபத்தில் மூவர் பலி

குவாந்தான், ஜூன் 25: பெக்கானில் உள்ள ஜாலான் பென்தா/லாமிர் கிலோமீட்டர் 7ல், மோட்டார் சைக்கிள் ஓட்டி சென்றவர் , சறுக்கி பல்நோக்கு வாகனம் (எம்பிவி) மீது மோதியதில் மூன்று சகோதரர்கள் பலி.

மதியம் 12.30 மணியளவில் நடந்த தாகக் கருதப்படும் இந்தச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்ததாக பெக்கான் மாவட்டக் காவல்துறை தலைவர் முகமட் சைடி மாட் சின் தெரிவித்தார்.

இறந்தவர்கள் நிக் இக்ராம் இட்வான் நிக் முகமட் கைருல் ஹிஷாம் (15), அவரது சகோதரர் நிக் நோர் வ்கிஹா (11) மற்றும் நிக் இக்ராம் நுக்மான் (5) என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் கம்போங் லங்கார், பெக்கானில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

"பலியானவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர் பாதையில் சறுக்கி குவாந்தனை நோக்கிச் சென்ற எம்பிவி மீது மோதியதில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது" என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

எம்பிவியில் ஏழு பேர் கொண்ட குடும்பம் இருந்ததாகவும் அவர்களில் மூவர் காயமடைந்ததாகவும் முகமட் சைடி கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காகப் பெக்கான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாகச் சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 ன் பிரிவு 41(1)ன் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

– பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.