NATIONAL

சனிக்கிழமை நடைபெறும் அன்வாரைச் சந்தியுங்கள் நிகழ்வில் பங்கேற்க நெகிரி மக்களுக்கு அழைப்பு

22 ஜூன் 2023, 9:28 AM
சனிக்கிழமை நடைபெறும் அன்வாரைச் சந்தியுங்கள் நிகழ்வில் பங்கேற்க நெகிரி மக்களுக்கு அழைப்பு

கோலாலம்பூர், ஜூன் 22 - நீலாயில் உள்ள மலேசிய இஸ்லாமிய அறிவியல்

பல்கலைக்கழகத்தில் (யு.எஸ்.ஐ.எம்.) சனிக்கிழமை (ஜூன் 24) நடைபெறும்

அன்வாரை சந்தியுங்கள் நிகழ்வில் பங்கேற்குமாறு நெகிரி செம்பிலான்

மக்களை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைக்கிறார் .

இந்த நிகழ்வில் கலந்து கொள்ள விரும்புவோர் temuanwar.com எனும்

இணைப்பின் வாயிலாக பதிவு செய்யலாம் என்று அவர் கூறினார்.

இணக்கமான சூழலில் நடைபெறும் இந்த கலந்தாய்வு நிகழ்வில் அனைததுத்

தரப்பினரிடமிருந்தும் கருத்துகளையும் கேள்விகளையும் கேட்டறிய ஆர்வமுடன்

இருக்கிறேன். சனியன்று சந்திப்போம் என்று அவர் தனது டிவிட்டர் பதிவில்

கூறினார்.

டிவிட்டர் பதிவில் உள்ள போஸ்டரில் அன்வாரை சந்திக்கும் நிகழ்வு

பல்கலைக்கழகத்தின் டேவான் துவாங்கு சான்சலரில் மதியம்

1.30 மணிக்குத் தொடங்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.