NATIONAL

கால்பந்து வீரரின் வீட்டுக் கதவைச் சேதப்படுத்தியதாகக் நம்பப்படும் அவரது காதலி கைது

22 ஜூன் 2023, 4:57 AM
கால்பந்து வீரரின் வீட்டுக் கதவைச் சேதப்படுத்தியதாகக் நம்பப்படும் அவரது காதலி கைது

கோத்தா கினாபாலு, ஜூன் 22: சபா கால்பந்து வீரரின் வீட்டுக் கதவைச் சேதப்படுத்தியதாக நம்பப்படும் அவரது காதலியைக் காவல்துறையினர் நேற்று இரவு 8 மணி அளவில் கைது செய்தனர்.

கடந்த சனிக்கிழமை இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட கால்பந்து வீரரிடமிருந்து தனது தரப்பு அறிக்கையைப் பெற்றதாகவும், குற்றவியல் சட்டத்தின் 427வது பிரிவின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப் பட்டதாகவும் கோத்தா கினாபாலு மாவட்டக் காவல் துறைத் தலைவர் ஏசிபி முகமட் ஜைதி அப்துல்லா ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

"இந்த வழக்கு தொடர்பாக எந்தவிதமான ஊகங்கள் மற்றும் தவறான செய்திகளையும் பரப்ப வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது," என்று அவர் கூறினார்.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.