NATIONAL

தூய்மையான கழிப்பறைப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு RM13,000 ரொக்கப் பரிசு - அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

12 ஜூன் 2023, 6:55 AM
தூய்மையான கழிப்பறைப் போட்டியின் வெற்றியாளர்களுக்கு RM13,000 ரொக்கப் பரிசு -  அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்

ஷா ஆலம், ஜூன் 12: அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) ஏற்பாடு

செய்துள்ள தூய்மையான, கவர்ச்சிகரமான மற்றும் நறுமணமுள்ள கழிப்பறைப்

போட்டியில் (பிஎம்டபிள்யூ) 2023யின் வெற்றியாளர்களுக்கு மொத்தம் RM13,000

ரொக்கப் பரிசு காத்திருக்கிறது.

பொது கழிப்பறைகளில் ஆறு பிரிவுகள் போட்டியிடுகின்றன. அவை இடைநிலை/மத

பள்ளிகள், வணிக மையங்கள், ஆரம்ப/மத பள்ளிகள், உணவகங்கள், வழிபாட்டு தளங்கள்

மற்றும் பெட்ரோல் நிலையங்கள் ஆகும்.

இப்போட்டி பொதுக் கழிப்பறைத் தூய்மையின் முக்கியத்துவம் குறித்து அம்பாங் ஜெயா

குடிமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கவும் சமூகத்தின் வசதிக்காக இந்த

நடைமுறையை அமல்படுத்துவதை ஊக்குவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக

உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இப்போட்டியில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தைப் பெறுபவருக்கு RM1,000

ரொக்கப் பரிசு வழங்கப்படும்.

"இப்போட்டியில் மூன்று முக்கிய கூறுகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளதாக உள்ளாட்சி மேம்பாட்டு அமைச்சர் இங்ஙா கோர் மிங்கின் கட்டளைக்கு இணங்க," அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் இதனை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் ஜூலை 1 முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை இப்போட்டிக்கான மதிப்பீடு

தொடங்கும்.

இப்போட்டிக்கு விண்ணபிக்க

https://docs.google.com/forms/d//1FAIpQLSdad5TGg3UdCtD4pReD32VL_vaEqt48kHs

T1oSL5SlibYRwrQ/viewform என்ற இணைப்பை நாடவும் அல்லது அம்பாங் ஜெயா

நகராண்மை கழகச் சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறையை 03-42857007 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.