NATIONAL

மோட்டார் சைக்கிள், கார்கள் மீது மரம் விழுந்ததில் ஒரு மரணம், ஒன்பது பேர் காயம்

10 ஜூன் 2023, 7:57 AM
மோட்டார் சைக்கிள், கார்கள் மீது மரம் விழுந்ததில் ஒரு மரணம், ஒன்பது பேர் காயம்

ஜோர்ஜ் டவுன், ஜூன் 10- இங்குள்ள துன் டாக்டர் லிம் சோங் இயூ

விரைவுச் சாலையில் இன்று விடியற்காலை மரம் விழுந்த சம்பவத்தில்

மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் உயிரிழந்ததோடு ஒன்பது பேர்

காயங்களுக்குள்ளாயினர்.

இந்த சம்பவத்தில் இரு கார்களும் மூன்று மோட்டார் சைக்கிள்களும்

பாதிக்கப்பட்டதாக ஜாலான் பேராக் தீயணைப்பு மற்றும் மீட்பு

நிலையத்தின் தலைவர் அஸிலான் ஹசான் கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் விடியற்காலை 1.26 மணியளவில் தகவல்

கிடைத்ததைத் தொடர்ந்து 18 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு

விரைந்ததாக அவர் சொன்னார்.

சம்பவ இடத்தை அடைந்த போது மரம் ஒன்று பல வாகனங்கள் மீது

விழுந்துள்ளதை தீயணைப்புத் துறையினர் கண்டனர். அந்த வாகனங்களில்

சிக்கிக் கொண்டிருந்த 10 பேரை சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி

அவர்கள் மீட்டனர் என்று அவரை மேற்கோள் காட்டி பெரித்தா ஹரியான்

செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிளோடிட்டி சம்பவ இடத்திலேயே

உயிரிழந்த வேளையில் மேலும் இருவருக்கு கால்களில் முறிவு ஏற்பட்டது

என்றார் அவர்.

காயமடைந்த அனைவரும் பினாங்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக

அனுமதிக்கப்பட்ட வேளையில் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை

நடத்தும் பொறுப்பு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவர் மேலும்

சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.