NATIONAL

எம்.பி.எஸ்.-சொக்சோ ஏற்பாட்டில் மினி வேலை வாய்ப்புச் சந்தை- ஜூன் 17 ஆம் தேதி நடைபெறும்

9 ஜூன் 2023, 8:22 AM
எம்.பி.எஸ்.-சொக்சோ ஏற்பாட்டில் மினி வேலை வாய்ப்புச் சந்தை- ஜூன் 17 ஆம் தேதி நடைபெறும்

ஷா ஆலம், ஜூன் 9- இம்மாதம் 27ஆம் தேதி செலாயாங் நகராண்மைக் கழகத்

தலைமையகத்தின் வரவேற்புக்கூடத்தில் நடைபெறவிருக்கும் மினி வேலை வாய்ப்புச்

சந்தையில் பங்கேற்க பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

செலாயாங் நகராண்மைக் கழகம் மற்றும் சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு

நிறுவனத்தின் ஏற்பாட்டிலான இந்த வேலை வாய்ப்புச் சந்தை காலை 10.00 மணி முதல்

மாலை 4.00 மணி வரை நடைபெறும்.

இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் லஸாடா, ஏ அண்ட் டபள்யூ ரெஸ்ரோண்ட், அஃபின்

குழுமம் உள்பட 10 நிறுவனங்கள் பங்கேற்பதாக நகராண்மைக் கழகம் தனது

முகநூல் பதிவில் கூறியது. இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் கலந்து கொள்ளும் பொது மக்களின் வசதிக்காக மெனாரா எம்.பி.எஸ். வரை ஸ்மார்ட் சிலாங்கூர் இலவசப்

பஸ் சேவை வழங்கப்படுவதாகவும் அது தெரிவித்தது.

பண்டார் பாரு செலாயாங், செலாயாங் ஹைட்ஸ், பிரிமா செலாயாங், ஓன்

செலாயாங், சுங்கை துவா ஆகிய பகுதிகளுக்கு இச்சேவை வழங்கப்படும்.

ஆர்வமுள்ளவர்கள்  bit.ly/MiniKarnivalJomKerja2023 என்ற இணைப்பின் வாயிலாக  இந்த வேலை வாய்ப்புக்கு பதிவு செய்யலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.