NATIONAL

சாலை விபத்தில் இரண்டு வயது சிறுவன் உட்பட ஐவர் பலி

6 ஜூன் 2023, 4:49 AM
சாலை விபத்தில் இரண்டு வயது சிறுவன் உட்பட ஐவர் பலி

சிபு, ஜூன் 6: நேற்று ஜாலான் சிபு-பிந்துலு அருகே உள்ள கிலோமீட்டர் 64இல் நடந்த சாலை விபத்தில் இரண்டு வயது சிறுவன் மற்றும் முதியவர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

காலை 10.09 மணி அளவில் பதிவான இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் மார்கோஸ் மரிக்கன் (26), மரிக்கன்@லங்கான் லெகி (61), அலிசேஷா பத்ரிஷ் லாங்கி (24), மற்றும் அலெசாண்ட்ரோ கொலின் ஸ்டீவர்ட் (2) என அடையாளம் காணப்பட்டனர்.

"இறந்த மற்றொருவரின் அடையாளம் இன்னும் கிடைக்கவில்லை" என்று செலாங்காவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) தலைவர் சுக்ரி அப் ரஹீமைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

பெரோடுவா மைவி காரும் கியா ஸ்போர்டேஜ் காரும் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் உயிர் பிழைத்ததாக சுக்ரி கூறினார்.

" அதில் கடுமையாகக் காயத்திற்குள்ளாகி இருவரை மேல் சிகிச்சைக்காகச் செலாங்காவ் ஹெல்த் கிளினிக்கிற்கு அனுப்பப்பட்டுள்ளனர்," என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.