NATIONAL

RON97 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு RM3.37ஆக உயர்ந்துள்ளது - RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லை

1 ஜூன் 2023, 8:02 AM
RON97 பெட்ரோலின் சில்லறை விலை லிட்டருக்கு RM3.37ஆக உயர்ந்துள்ளது - RON95 பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம்  இல்லை

கோலாலம்பூர், ஜூன், 1: ஜூன் 1 முதல் 7 வரை RON97 பெட்ரோலின்

சில்லறை விலை லிட்டருக்கு RM3.35 இலிருந்து RM3.37ஆக இரண்டு

சென்கள் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் RON95 பெட்ரோல் மற்றும்

டீசல் விலையில் எந்தவொரு மாற்றமும் இல்லை.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வால் ஏற்படும்

பாதிப்புகளில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் வகையில், RON95

பெட்ரோல் லிட்டருக்கு 2.05 ஆகவும் மற்றும் டீசல் லிட்டருக்கு

RM2.15 என்ற உச்சவரம்பு விலையை அரசு பராமரித்து வருவதாக நிதி

அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

உலகக் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்களின்

தாக்கத்தை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் நலன்

பராமரிக்கப்படுவதை உறுதிசெய்யத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும்

என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.