NATIONAL

தேசியக் கணக்காய்வுத் குழுவின் உறுப்பினர்களாக ஷா ஆலம், பாங்கி எம்.பி.க்கள் உள்பட 12 பேர் நியமனம்

24 மே 2023, 9:15 AM
தேசியக் கணக்காய்வுத் குழுவின் உறுப்பினர்களாக ஷா ஆலம், பாங்கி எம்.பி.க்கள் உள்பட 12 பேர் நியமனம்

ஷா ஆலம், மே 24- பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் தேசியக்

கணக்காய்வுக் குழு (பி.ஏ.சி.) உறுப்பினர்களாக 12 நாடாளுமன்ற

உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த புதிய நியமனத்தின் வழி பி.ஏ.சி.யில் 14 உறுப்பினர்களின் நியமனம்

முழுமைப் பெற்றுள்ளது. இந்த குழுவின் தலைவராக மஸ்ஜித் தானா

நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ மாஸ் எர்மியாத்தி சம்சுடின் கடந்த

ஏப்ரல் 4ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

பாங்கி உறுப்பினர் ஷியார்ரட்ஸான் ஜோஹான், சண்டகான் உறுப்பினர்

விவியன் வோங் ஷிர் யீ, பாரிட் சூலோ உறுப்பினர் டத்தோஸ்ரீ நோராயினி

அகமது, தம்பின் உறுப்பினர் டத்தோ முகமது இஸாம் முகமது இசா,

பாயான் பாரு உறுப்பினர் சிம் ஸீ ஸின் வாங்சா மாஜூ உறுப்பினர்

ஜாஹிர் ஹசான் ஆகியோரே புதிதாக நியமனம் பெற்ற

உறுப்பினர்களாவர்.

இவர்கள் தவிர ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசுப்,

பெத்தோங் உறுப்பினர் டாக்டர் ரிச்சர்ட் ராபு, குபாங் பாசு உறுப்பினர்

டத்தோ டாக்டர் கூ அப்துல் ரஹ்மான், சிக் உறுப்பினர் டத்தோ அலி பிஜி,

காப்பார் உறுப்பினர் டாக்டர் ஹலிமா அலி ஆகியோருக்கும் இந்த

குழுவில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.