NATIONAL

மின்னணு கட்டண சேவையில் விரைந்து மதிப்பீட்டு வரியைச் செலுத்தி அதிர்ஷ்ட குலுக்கில் பரிசு  வெல்லுங்கள் - எம்பிஏ ஜே

23 மே 2023, 8:17 AM
மின்னணு கட்டண சேவையில் விரைந்து மதிப்பீட்டு வரியைச் செலுத்தி அதிர்ஷ்ட குலுக்கில் பரிசு  வெல்லுங்கள் - எம்பிஏ ஜே

ஷா ஆலம், மே 23: அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் (எம்பிஏஜே) மதிப்பீட்டு வரியை மின்னணு கட்டண சேவையில் விரைந்து செலுத்துவதன் வழி அம்பாங் ஜெயா குடியிருப்பாளர்கள் நான்கு மோட்டார் சைக்கிள்களை வெல்லும் வாய்ப்பு உள்ளது

RM300,000 க்கும் அதிக மதிப்புள்ள பரிசுகளுடன் கூடிய அதிர்ஷ்டக் குலுக்கல்  மூலம்  பல்வேறு கவர்ச்சிகரமான வெகுமதிகள் வழங்குவதாக நகராண்மைக் கழகம்  தெரிவித்துள்ளது.

"அம்பாங் ஜெயா நகராண்மை கழக மதிப்பீட்டு வரி 2022 ஐ ``Icomm அம்பாங் ஜெயா நகராண்மை கழகம்`` மூலம் https://icomm.mpaj.gov.my என்ற இணைப்பில் செலுத்தலாம் அல்லது அதை Google Play அல்லது App Store இல் பதிவிறக்கம் செய்யலாம்" என்று முகநூல் வழியாக தெரிவிக்கப்பட்டது.

முதல் தவணைக்கு ஜனவரி 1 முதல் பிப்ரவரி 28 வரையிலும், இரண்டாவது தவணைக்கு ஜூலை 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலும் பங்கேற்பு நடைபெறும்.

மேலும் தகவலுக்கு, www.mpaj.gov.my ஐப் பார்வையிடவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.