NATIONAL

மூன்று மாதக் குழந்தை இறந்ததற்கு காரணமான பெண் கைது

23 மே 2023, 3:47 AM
மூன்று மாதக் குழந்தை இறந்ததற்கு காரணமான பெண் கைது

கோலாலம்பூர், மே 23: மே 9 அன்று சுங்கைவேயில், மூன்று மாதப் பெண் குழந்தையைச் சரியாகக் கவனித்து கொள்ளாதக் காரணத்தால் இறந்துள்ளது. இச் சம்பவத்திற்கு காரணமாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.

சம்பவத்தன்று பிற்பகல் 3.56 மணி அளவில் அக்குழந்தையின் தந்தையிடமிருந்து காவல்துறையினர் புகார் பெற்றதை அடுத்து, 31 வயதான அப்பெண்ணைப் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அவரது வீட்டில் மாலை 5.30 மணியளவில் கைது செய்தனர் எனப் பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி முகமட் ஃபக்ருதின் அப்துல் ஹமிட் கூறினார்.

அப்பெண்ணிடம் இருந்து வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர் அவர் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தையின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

குழந்தைகள் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு உதவ தொடர்புடைய தகவல்களுடன் பொதுமக்கள் அருகிலுள்ள நிலையத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 03-79662222 என்ற எண்ணில் பெட்டாலிங் ஜெயா மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் செயல்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.

- பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.