NATIONAL

சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இடியுடன் கூடிய கனமழை

17 மே 2023, 9:45 AM
சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இடியுடன் கூடிய கனமழை

ஷா ஆலம், மே 17: சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவில் இன்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பெர்லிஸ், பினாங்கு, கெடா, பேராக், திரங்கானு, பகாங், நெகிரி செம்பிலான் மற்றும் ஜொகூர் ஆகிய மாநிலங்களிலும் இதே வானிலைதான் இருக்கும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எதிர்பார்க்கிறது.

இதற்கிடையில், சபாவில் (தம்புனன்), மேற்கு கடற்கரையில் (துவாரன், ரனாவ், கோத்தா பெலுட்) மற்றும் தவாவ் (லஹாட் டத்து) ஆகிய இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி) க்கு மேல் மழை பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப் படுகிறது.

மெட் மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப் படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன்பாட்டை பதிவிறக்கம் செய்யவும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.