NATIONAL

மனிதவள அமைச்சர் சிவகுமாரின் ஆசிரியர் தின வாழ்த்து

16 மே 2023, 4:30 AM
மனிதவள அமைச்சர் சிவகுமாரின் ஆசிரியர் தின வாழ்த்து

கோலாலம்பூர் மே 16-  அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இளம் தலைமுறையை ஊக்குவித்து சிறந்த தேசத்தை ஆசிரியர்களே கட்டமைக்கின்றனர். இந்த நன்னாளில் நாம் அனைவரும் ஆசிரியர்களுக்கு மரியாதையும், நன்றியும் செலுத்த வேண்டும். ஆசிரியர்கள் செய்துவரும் சேவை மகத்தானது.

மேலும் ஆசிரியப் பணி என்பது மாமனிதர்களை உருவாக்கும் மகத்தான பணியாகும். மாணவர்கள் தங்கு தடையின்றி தரமான கல்வியைப் பெறுவதற்கு ஆசிரியர்கள் தங்களது கடமையை முறையாக செய்து வருகின்றனர்.

ஆசிரியர்கள் அவ்வப்போது  நிகழும் தொழில்நுட்ப  மாற்றங்களுக்கு ஏற்ப தங்களை மேம்படுத்திக் கொண்டு  மாணவர்களை  சிறந்தவர்களாக உருவாக்கும் பணியைத் திறம்படச்  செய்ய வேண்டும்.

இந்நாளில் ஆசிரியர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் குறிப்பிட்டுள்ளார் .

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.