NATIONAL

ஆசிரியர்களுக்காகச் 'சேகு, ஜோம் மாக்கான்!` பிரச்சார ஏற்பாடு - ஜிஎம் கிள்ளான்

15 மே 2023, 9:58 AM
ஆசிரியர்களுக்காகச் 'சேகு, ஜோம் மாக்கான்!` பிரச்சார ஏற்பாடு - ஜிஎம் கிள்ளான்

கோலாலம்பூர் மே 15: மே 16 முதல் 31 வரை ஆசிரியர்களுக்காக பூசாட் போரோங் ஜிஎம் கிள்ளான் சிறப்பு சேகு', ஜோம் மக்கான்!' பிரச்சாரத்தை ஏற்பாடு செய்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் மே 16 அன்று ஆசிரியர் தினத்தை கொண்டாடும் வகையில், நாட்டின் குழந்தைகளுக்குக் கல்வி புகட்டும் ஆசிரியர்களின் அளப்பரிய சேவையைப் பாராட்ட இந்த பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜி எம் கிள்ளான் மொத்த விற்பனை மைய பிராண்ட் கம்யூனிகேஷன்ஸ் மூத்த மேலாளர் நோர்சுஹைடா ஓத்மான் கூறினார்.

"ஜிஎம் கிள்ளானை விஜயம் செய்யும்   அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கும் வகையில் அங்குள்ள எந்தக் கடையில் RM100 மற்றும் அதற்கு மேல் இரண்டு ரசீதுகளில் பொருட்களை வாங்கும் முதல் 500 ஆசிரியர்களுக்கு சிறப்பு உணவு வவுச்சர்கள் இலவசமாக விநியோகிக்கப்படும்.

"பின், ஆசிரியர்கள் வாடிக்கையாளர் சேவை கவுன்டருக்கு ரசீதுகளை கொண்டு வர வேண்டும் மற்றும் உறுதிப்படுத்தும் வகையில் பள்ளி மாணவர்களுடன் இருக்கும் புகைப்படத்தைக் காட்ட வேண்டும்," என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

நாட்டின் கல்வியாளர்களுக்கான பாராட்டுக்குரிய அடையாளமாக இந்த நடவடிக்கை இருப்பதுடன், வவுச்சர்களைப் பரிசாக வழங்குவது சமூகத்திற்கு பங்களிக்கும் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாகும் என்று அவர் கூறினார்.

"ஆசிரியர்கள் ஜிஎம் கிள்ளான் வாடிக்கையாளர்களில் ஒரு பெரிய குழுவாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் ஜிஎம் கிள்ளாளில் உள்ள கடைகளில் பள்ளிகளில் நடக்கும் நிகழ்வுகளுக்கு தேவையான பொருட்களை மொத்த விலையில் வாங்குகிறார்கள்," என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.