NATIONAL

கோம்பாக் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி நிகழ்ச்சிக்கு 35,000க்கும் மேற்பட்டோர் வருகை

15 மே 2023, 2:01 AM
கோம்பாக் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி நிகழ்ச்சிக்கு 35,000க்கும் மேற்பட்டோர் வருகை

கோம்பாக், மே 15: கோம்பாக் மாவட்டத்தில் நடைபெற்ற ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி (ஜேகேஎஸ்ஏ) நிகழ்ச்சிக்கு 35,000க்கும் மேற்பட்ட வருகையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சி தாமான் ஶ்ரீ கோம்பாகில் உள்ள 3ஆம் கட்ட வணிகப் பகுதியில் இரவு 8 முதல் 11 மணி வரை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, டத்தின்ஸ்ரீ மஸ்டியனா, அமைச்சர்கள் மற்றும் மாநில அரசு எஸ்கோ ஆகியோரும் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.

லெமாங் டாவுன் லெரெக், கெதுபாட், ரெண்டாங், சாத்தே, ஆடு கோலேக், பல்வேறு வகையான பலகாரங்கள், பழங்கள் மற்றும் ஆயர் பாலாங் உட்பட 42க்கும் மேற்பட்ட உணவுகளுடன் மொத்தம் 29 கடைகள் இருந்தன.

பிரபல கலைஞர்களான டத்தோ எம் நசீர், டயாங் நூர்ஃபைசா மற்றும் பீஜா மென்தோர் ஆகியோரின் நிகழ்ச்சிகளும் வருகையாளர்களை மகிழ்வித்தனர்.

ஏப்ரல் 28 ஆம் தேதி தொடங்கி ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி நிகழ்ச்சி ஒவ்வொரு வாரமும் சியாவாலின் போது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற்றது. சிப்பாங், உலு சிலாங்கூர், கிள்ளான், உலு லங்காட், கோலா லங்காட், பெட்டாலிங், சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய இடங்களில் இந் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.