NATIONAL

சிலாங்கூர் மாநிலக் கருவூலத்துறையின்  ஹரி ராயா ஐடில்பித்ரி 2023 இல் 1,500 பேர் கலந்து கொண்டனர்

12 மே 2023, 10:28 AM
சிலாங்கூர் மாநிலக் கருவூலத்துறையின்  ஹரி ராயா ஐடில்பித்ரி 2023 இல் 1,500 பேர் கலந்து கொண்டனர்

ஷா ஆலம், மே 12: செக்‌ஷன் 7ல் உள்ள ஆட்சிக்குழு உறுப்பினர்கள் இல்ல மண்டபத்தில்  நடைபெற்ற சிலாங்கூர் மாநிலக் கருவூலத் துறையின் ஹரி ராயா ஐடில்பித்ரி 2023 யில்  ஊழியர்கள் மற்றும் விருந்தினர்கள் உட்பட சுமார் 1,500 பேர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் கலந்து கொண்டார்.

ஆடு, கோழி, வறுக்கப்பட்ட கணவாய், லக்சா, அப்பம் பாலிக் மற்றும் தக்காளி சாதம் உள்ளிட்ட பல்வேறு உணவுகள் வழங்கப்பட்டன.

சிலாங்கூர் மாநிலக் கருவூல இசைக்குழுவின் நிகழ்ச்சியும் விருந்தினர்களை மகிழ்வித்தது.

மேலும் இந்நிகழ்விற்குச் சிலாங்கூர் மாநிலச் சட்டமன்ற சபாநாயகர் இங் சூய் லீம், சுற்றுச்சூழல் எஸ்கோ ஹீ லோய் சியான் மற்றும் மூத்த மாநில அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.