NATIONAL

சீ போட்டி- தேசிய ஆண்கள் பூப்பந்து அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வு

9 மே 2023, 9:01 AM
சீ போட்டி- தேசிய ஆண்கள் பூப்பந்து அணி அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்வு

புனோம் பென், மே 9- இங்கு நடைபெற்று வரும் 2023ஆம் ஆண்டு சீ

போட்டியின் குழு நிலையிலான பூப்பந்தாட்டத்தில் தேசிய ஆண்கள் அணி

3-1 என்ற புள்ளிக்கணக்கில் வியட்னாமைத் தோற்கடித்து அரையிறுதிச்

சுற்றுக்குத் தேர்வானது.

மோரோடோக் தெக்கோ தேசியப் பூப்பந்து அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில்

மலேசியாவின் ஒற்றையப் பிரிவு ஆட்டக்காரரான லியோங் ஜூன் ஹோ

21-14, 14-21, 21-16 என்ற புள்ளிக்கணக்கில் இங்குயேன் ஹாய் டாங்கை

தோற்கடித்தார்.

இரட்டையர் பிரிவின் முதலாவது ஆட்டத்தின் இரண்டாவது செட்டில்

வியட்னாமின் இங்குயேன் டின் ஹோங்-ட்ரான் டின் மா ஜோடி 21-19 என்ற

புள்ளிக் கணக்கில் முன்னணி வகித்த நிலையில் மலேசியாவின் பே சுன்

மெங்-கோ பூன் ஸி ஜோடி மிகவும் நிதானமாக ஆடி 21-14 என்ற புள்ளிக்

கணக்கில் மலேசியாவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது.

எனினும், மற்றொரு ஆட்டத்தி உலக தர வரிசையில் 93வது

இடத்திலிருக்கும் மலேசிய விளையாட்டாளரான லு சுன் யாங் உலகின்

163ஆம் நிலை ஆட்டக்காரரான லி டுக் பாட்டிடம் தோல்வி கண்டார்.

இறுதியாட்டத்தில் வியட்னாமின் ஷூன் இங்குயென் ஷூவான் ஹூங்-

பாம் வான் ஹாய் ஜோடியை 21-14, 14-21 மற்றும் 21-18 என்ற புள்ளிகளில்

தோற்கடித்து சியா வேவேய்ஜி- லியு ஷூன் ஜோடியினர் நாளை

நடைபெறும் அரையிறுதியாட்டத்திற்கு மலேசியாவைத் தகுதிப் பெறச்

செய்தனர்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.