NATIONAL

சிலாங்கூர் எஃப்சி விளையாட்டாளர்கள்  இந்த  சீசனில்  வெளிப்படுத்திய செயல்திறன் மற்றும் ஆட்டம்  சிறப்பாக உள்ளது

9 மே 2023, 6:46 AM
சிலாங்கூர் எஃப்சி விளையாட்டாளர்கள்  இந்த  சீசனில்  வெளிப்படுத்திய செயல்திறன் மற்றும் ஆட்டம்  சிறப்பாக உள்ளது

ஷா ஆலம், மே 9: இந்த சீசனின் சூப்பர் லீக் போட்டியில் சிலாங்கூர் எஃப்சி

விளையாட்டாளர்கள் வெளிப்படுத்திய செயல்திறன் மற்றும் ஆட்டம் கடந்த சீசனைக்

காட்டிலும் சிறந்த தரத்துடன் காணப்பட்டதாக அதன் தலைமை செயல் அதிகாரி

தெரிவித்தார்.

எவ்வாறாயினும், லீக்கின் நீண்ட பயணத்தை கவனத்தில் கொண்டு  எப்பொழுதும்  விழிப்புடன்  உயர்நிலையை அடைய  விளையாட்டாளர்கள்  முழு கவனத்தை  செலுத்த வேண்டும்.  தொடர்ந்து  வெற்றிக்காகப் பாடுபடுங்கள் என்றும் டாக்டர் ஜோஹன் கமல் நினைவுபடுத்தினார்.

தற்போது நாங்கள் முன்னேற்றத்தைக் காண்கிறோம். கடந்த சீசனுடன் ஒப்பிடுகையில்

நாங்கள் மகிழ்ச்சியாக உள்ளோம். ஆனால் இந்த சீசனை சிறப்பாக முடிக்க, எங்கள்

பலவீனங்களையும் செயல் திறனையும் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும்.

விளையாட்டாளர்கள் உறுதியுடன் இருக்க வேண்டும். மேலும், வெற்றியின் வேகத்தை

அடுத்த போட்டியிலும் தொடருங்கள என்று கூறினார்.

ஜூலை மாதம் திறக்கப்படும் இரண்டாவது பரிமாற்றம் குறித்து ஜோஹன், தனது

அணியை மேலும் வலுப்படுத்த சில புதிய விளையாட்டாளர்களைக் கொண்டு வரலாம்

என்று கூறினார்.

இப்போது இன்னும் சில விளையாட்டுகள் மீதமுள்ளதால், தற்போது இருக்கக்கூடிய

விளையாட்டாளர்கள் மீது கவனம் செலுத்துகிறோம். அதுமட்டுமில்லாமல் புதிய

விளையாட்டாளர்களை கொண்டு வருவது குறித்து பரிசீலிக்கும் நேரம் வந்துவிட்டது.

இப்போது இருக்கும் விளையாட்டாளர்களை நாங்கள் மதிப்பீடு செய்கிறோம் என்று

அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.