ECONOMY

இயந்திரத்தில் சிக்கி தொழிற்சாலை ஊழியர் மரணம்- ஷா ஆலமில் சம்பவம்

6 மே 2023, 5:46 AM
இயந்திரத்தில் சிக்கி தொழிற்சாலை ஊழியர் மரணம்- ஷா ஆலமில் சம்பவம்

ஷா ஆலம், மே 6- தொழிற்சாலை ஊழியர் ஒருவர் ஃபைபர் எனப்படும் நார் இழை இழுவை இயந்திரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று காலை இங்குள்ள ஜாலான் புக்கிட் கெமுனிங்கில் நிகழந்தது.

கடுமையான காயங்களுக்குள்ளான முகமது சுராஷ் அலி (வயது 21) என்ற அந்த வங்காளதேச தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிபடுத்தப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் காலை 7.06 மணியளவில் தகவல் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து ஷா ஆலம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 10 பேர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கை மையத்தின் தலைவர் ஜூல்பிகார் ஜாபர் கூறினார்.

பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த ஊழியர் இயந்திரத்தில் சிக்கிக் கொண்டதாக கூறிய அவர், தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு அவரது உடலை மீட்டதாகச் சொன்னார்.

கடும் காயங்களுக்குள்ளான அந்த நபர் உயிரிழந்து விட்டதை சம்பவ இடத்திலிருந்த மருத்துவக் குழுவினர் உறுதிப்படுத்தினர் என்றார் அவர். 

மேல் நடவடிக்கைக்காக அவ்வாடவரின் உடல் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.