NATIONAL

உலு சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை

2 மே 2023, 8:39 AM
உலு சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை

ஷா ஆலம், 2 மே: உலு சிலாங்கூரில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் மற்றும் காற்று வீசும் என்று மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கணித்துள்ளது.

கெடா, பேராக், கிளந்தான், பகாங், சரவாக், சபாவில் உள்ள சில இடங்களிலும் மற்றும் திரங்கானுவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இதே வானிலை தான் இருக்கும் என்று முகநூலில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மி.மீ./மணி)க்கு மேல் மழை பெய்யும் தீவிரம் கொண்ட இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவது குறித்து எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழையின் தீவிரம் மணிக்கு 20 மில்லி மீட்டர் அதிகமாக, ஒரு மணி நேரத்திற்கு அல்லது அதற்கும் மேலாகப் பெய்யும் போது எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இடியுடன் கூடிய மழையின் முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகியக் கால எச்சரிக்கை ஆகும்.

சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்குப் பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தைப் பார்க்கவும் அல்லது myCuaca பயன் பாட்டைப் பதிவிறக்கம் செய்யவும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.