NATIONAL

புசாட் அசுஹான் துனாஸ் இஸ்லாம் (பஸ்தி) மழலையர் பள்ளியில் தீ விபத்து

26 ஏப்ரல் 2023, 8:50 AM
புசாட் அசுஹான் துனாஸ் இஸ்லாம் (பஸ்தி) மழலையர் பள்ளியில் தீ விபத்து

ஷா ஆலம், ஏப்ரல் 26: இன்று மதியம் 12.30 மணியளவில் ஜாலான் கெபுன், செக்‌ஷன் 30இல் உள்ள புசாட் அசுஹான் துனாஸ் இஸ்லாம் (பஸ்தி) மழலையர் பள்ளி தீயில் எரிந்து நாசமானது.

சிலாங்கூர் தீயணைப்பு இயக்குனர் மோர்னி மாமட், மதியம் 12.37 மணி அளவில் இச்சம்பவம் தொடர்பாகத் தனது தரப்புக்கு அழைப்பு வந்ததாகவும், நான்கு தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயணைப்பு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் கூறினார்.

"இரண்டு மாடி கொண்ட அப்பள்ளியின் B வகுப்பு கட்டிடத்தில் தீ ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்த போது, தீ வேகமாக அருகில் உள்ள கடை மற்றும் வீட்டிற்கும் பரவத் தொடங்கியது.

சுமார் 50 நிமிடங்களுக்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இருப்பினும், இதில் யாரும் பாதிக்கப்படவில்லை,”என்று அவர் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.