NATIONAL

கோலசிலாங்கூர்  வாகீசர் தமிழ் பள்ளியில்  குறுக்கோட்டப் போட்டி 

26 ஏப்ரல் 2023, 1:52 AM
கோலசிலாங்கூர்  வாகீசர் தமிழ் பள்ளியில்  குறுக்கோட்டப் போட்டி 

கோல சிலாங்கூர் ஏப் 26: கோலசிலாங்கூர் வாகீசர் தமிழ் பள்ளியில் இணைப்பாட பிரிவின் ஏற்பாட்டில் குறுக்கோட்டப் போட்டி பள்ளியின் அருகாமையில் உள்ள குடியிருப்பு பகுதியின் வழியாக சிறப்பாக நடைபெற்றது.

4,5,6-என மூன்று பிரிவுகளாக  நடைபெற்ற இக்குறுக்கோட்ட போட்டி  புறப்பாட நடவடிக்கை  ஆசிரியை  மோகனா அவர்களின் முயற்சியில் நடைபெற்றது. சுமார் 200 - மாணவர்கள் கலந்து கொண்ட  இப்போட்டி  காலை 7.30-மணிக்கு தொடங்கி  சுமார் 11:00-மணியளவில் சிறப்பாக முடியுற்றது.

கடுமையான போட்டியாக இருந்தாலும் இந்த குறுக்கோட்டப் போட்டி மாணவர்களுக்கு ஓர் புத்துணர்ச்சியாகும்,உடலுக்கு ஆரோக்கியமாகவும்,இருக்க வேண்டும் என்றும் நான்கு நாட்கள் குறுக்கோட்ட போட்டியின் பயிற்சியின் பொழுது மாணவர்களுக்கு பல வழிகளில்  உதவி புரிந்த அனைவருக்கும்  நன்றியை தெரிவித்துக் கொண்டார் திரு: பூபாலன் ரெங்கசாமி (எல்.பி.எஸ்) . அது மட்டும் இன்றி நிறைவாக பள்ளியின் குறுக்கோட்டப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கேடயமும், நற் சான்றிதலும் வழங்கப்பட்டது.

சிறப்பு  வருகையாளராக வருகைபுரிந்த திரு : லெட்சுமணன்  மற்றும் பள்ளியின் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு இந்த வேளையில் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டார்  பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி:பெண்ணரசி தனபால் அவர்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.