NATIONAL

சபாவின் பெலுரானை மிதமான நிலநடுக்கம் உலுக்கியது

20 ஏப்ரல் 2023, 4:36 AM
சபாவின் பெலுரானை மிதமான நிலநடுக்கம் உலுக்கியது

கோலாலம்பூர், ஏப் 20- இன்று காலை 9.07 மணியளவில் சபாவின் பெலூரானில் கடலில் ரிக்டர் அளவில் 3.5 எனப் பதிவான மிதமான  நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் 6.6 பாகை வடக்கு மற்றும் 117.4  பாகை கிழக்கில் 10 கிலோமீட்டர்  ஆழத்தில் மையமிட்டிருந்ததாக மலேசிய வானிலை ஆய்வு மையம்  தனது அறிக்கையில் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கம்  சபாவின் பிடாசிலிருந்து  தென்கிழக்கே 37 கிலோ மீட்டர் மற்றும் இந்தோனேசியாவின் தாரகனுக்கு வடக்கே 365 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இருப்பினும், இந்த பூகம்பத்தால் மலேசியாவிற்குச் சுனாமி அச்சுறுத்தல் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.