NATIONAL

நான் முதலில் ஓய்வெடுக்கிறேன்- டாக்டர் நோர் ஹிஷாம் கூறுகிறார்

20 ஏப்ரல் 2023, 3:40 AM
நான் முதலில் ஓய்வெடுக்கிறேன்- டாக்டர் நோர் ஹிஷாம் கூறுகிறார்

புத்ராஜெயா, ஏப் 20- சுகாதார அமைச்சில் கடந்த 35 ஆண்டுகள்

பணியாற்றிய சுகாதாரத் துறை தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ டாக்டர்

நோர் ஹிஷாம் அப்துல்லா நாளை 21ஆம் தேதி தொடங்கி கட்டாயப் பணி

ஓய்வு பெறுகிறார்.

சுகாதார அமைச்சில் இறுதி நாளான நேற்று மாலை 4.17 மணியளவில்

தனது பணியை முடித்துக் கொண்ட அவர், அங்கு குழுமியிருந்த

நிருபர்களிடம் “நான் முதலில் ஓய்வெடுக்க விரும்புகிறேன்“ எனக்

கூறினார்.

சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா, சுகாதாத்

துணையமைச்சர் லுக்னிஸ்மான் அவாங் சவுனி மற்றும் அமைச்சின்

பணியாளர்கள் ஒன்று கூடி நோர் ஹிஷாமை வாழ்த்தி வழியனுப்பு

வைத்தனர்.

இறைவன் அருளால் அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. கோவிட்-19

சம்பவங்களும் குறைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. நானும்

ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.