NATIONAL

ஆசிய பூப்பந்து வெற்றியாளர் போட்டி- உடல்நலக் குறைவு காரணமாகப் பியர்லி டான் விலகல்

20 ஏப்ரல் 2023, 2:51 AM
ஆசிய பூப்பந்து வெற்றியாளர் போட்டி- உடல்நலக் குறைவு காரணமாகப் பியர்லி டான் விலகல்

கோலாலம்பூர், ஏப் 20- இம்மாதம் நடைபெறும் 2023ஆம் ஆண்டு ஆசிய

பூப்பந்து வெற்றியாளர் போட்டியில் மலேசியாவின் மகளிர்

இரட்டையர்களான பியர்லி டான்-எம்.தினா ஜோடி சாதனை படைக்கும் என

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உடல் நலப் பிரச்சனை காரணமாக

பியர்லி அப்போட்டியிலிருந்து திடீரென விலகியுள்ளார்.

இந்த தகவலை மலேசிய பூப்பந்து சங்கம் தனது இண்ட்ஸ்டாகிராம்

பதிவில் நேற்று மதியம் கூறியது.

உடல் நலக் குறைவு காரணமாக பியர்லி 2023 ஆசிய பூப்பந்து

வெற்றியாளர் கிண்ணப் போட்டியிலிருந்து விலகுகிறார் என அந்தப் பதிவு

தெரிவித்தது.

இந்த போட்டி ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் நகரில் இம்மாதம் 25 முதல்

30ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

உலகத் தர வரிசையில் எட்டாவது இடத்தை பிடித்துள்ள பியர்லி-தினா

ஜோடி 2022 பிரஞ்சு பொது வெற்றியார்களாகவும் விளங்குகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.